உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

-

அப்படியானால், இந்த வரம் தந்தருளும். மூடர்களைப் பார்க்கவும், மூடர்களைப் பற்றிக் கேட்கவும், அவர்களோடு பேசவும், அவர்களுடன் பழகவும் நேரிடாதபடி எனக்கு வரம் தந்தருள வேண்டும்" என்று கேட்டார் அகித்திமுனிவர்.

"மூடர்கள் உமக்கு என்ன தீமை செய்தார்கள்? அவர்களின் உறவு வேண்டாம் என்று ஏன் கேட்கிறீர்?”

"மூடர்கள் தீமைகளைச் செய்கிறார்கள். தீமைகளைச் செய்து, தாங்கமுடியாத மனச்சுமைகளை ஏற்றிக் கொள்கிறார்கள். நற்செயல்கள் அவர்களுக்குத் தீமையாகத் தெரிகின்றன. நன்மைகளைக் கூறினால் அவர்கள் வெறுப்படைகிறார்கள். நன்நெறியை அறியமாட்டார்கள். ஆகவே அவர்கள் உறவு வேண்டியதில்லை.'

66

"நன்று நன்று. முனிவரே! மூடர் உறவு இல்லாத வரத்தைத் தந்தேன். வேறு ஏதேனும் வரங் கேட்கலாம்.

66

'அறிஞர்களைக் காணவும், அறிஞர்களின் சொற்களைக் கேட்கவும் அவரோடு பழகவும், அவரோடு வசிக்கவும் எனக்கு வரம் தந்தருள வேண்டுகிறேன்.

66

و,

'முனிவரே! அறிஞர்கள் உறவு வேண்டுகிறீர். அவர்கள் உமக்கு என்ன நன்மை செய்தார்கள்?”

66

‘அறிஞர்கள் நன்மையையே செய்கிறார்கள். அவர்கள் தீமை செய்து பாவத்தைச் சுமக்கிறதில்லை. நன்மை செய்வதையே அவர்கள் நாடுகிறார்கள். நல்ல வார்த்தையைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். நல்ல வழியிலே நடக்கிறார்கள். ஆகவே அறிஞர் களான நல்லவர் உறவை வேண்டுகிறேன்” என்று கூறினார் அகித்தி முனிவர்.

66

"நன்று நன்று. அறிஞர்களான நல்லவர் உறவு கிடைக்கும்படி வரம் தந்தேன். வேறு வரத்தையும் கேட்கலாம்" என்றான் சக்கன்.

66

ஆசை என்னும் தீய எண்ணம் என்னிடம் உண்டாகாமலிருக்க வேண்டும். தூய ஞானிகள் வந்து, என் அறிவுக்கு உணவாக ஞானத்தைப் புகட்டவேண்டும். நான் மற்றவர்க்குத் தானம் செய்ய வேண்டும். செய்த தானத்தைப்பற்றி மகிழ்ச்சி கொள்ள வேண்டும். இந்த வரத்தை எனக்குத் தந்தருளவேண்டும்.”