உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

85

தூரத்திலிருந்து உம்மை இங்கு அனுப்பியவர் யார்? மனித உடம்பிலே முக்கியமான உறுப்பு கண் அல்லவா? யாரும் கண்ணைத் தானமாக வழங்க மாட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா?”

குருட்டுக் கிழவன் கூறினான்: “விண்ணுலகத்திலே தேவர் களினால் சுஜம்பதி என்றும், மண்ணுலகத்திலே மனிதர்களால் மாகவான் என்றும் பெயர்கூறப்படுகிற சக்கன், என்னை இங்கு வந்து ஒரு கண்ணைத் தானமாகப் பெற்றுக்கொள்ளும்படி அனுப்பியருளினார். எல்லாத் தானத்திலும் நான் முதன்மையாக விரும்புகிற தானம் இதுதான். கொடை வள்ளலே! குருடனாகிய எனக்கு உம்முடைய கண்களில் ன்றைத் தானமாகக் கொடுத் தருளும். இல்லை என்று சொல்லாமல் இந்தச்சிறந்த தானத்தை எனக்குத் தந்தருளும், கண்ணைக் கொடுப்பவர் உலகத்திலே இலர் என்று கூறுகிறார்கள்.”

சிவி அரசன் கூறினார்: “ஓ பிராமணா! நீர் எதைக்கருதி இங்கு வந்தீரோ, நீர் எதைப்பெறுவதற்கு ஆசைப்பட்டீரோ, அதை நீர் பெறுவீர். இதோ தந்தேன். என் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்க. நீர் ஒரு கண்ணைக் கேட்டீர். நான் இரண்டு கண்களைத் தருகிறேன். என் கண்களைக் கொண்டு உமது பார்வையைப்பெற்றுச் சுகமே போவீராக. இவ்வாறு கூறிச் சிவி மன்னர் தமது கண்களைத் தானம் வழங்கினார்.

وو

தானம் வழங்குவதற்கு அந்த இடம் தகுந்ததல்ல வாகையினாலே அரசர் பிராமணனைத் தம்முடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரியாசனத்தில் அமர்ந்து, சீவகன் என்னும் பெயருள்ள மருத்து வனை அழைப்பித்தார். மருத்துவர் வந்தபோது அரசர் அவரிடம், “என் கண்ணை வெளியே எடுக்கவேண்டும்” என்று கூறினார்.

சிவி அரசர் தமது கண்ணைப் பிடுங்கிக் குருட்டுப் பிராம ணனுக்குத் தானம் வழங்குகிறார் என்னும் செய்தி விரைவில் நகர மெங்கும் பரவிற்று. அமைச்சர்களும், சேனைத் தலைவர் களும், அரசர் பெருமானின் சுற்றத்தார்களும் விரைந்து வந்தார் கள். வந்து அரசரைத் தடுத்து அழுதுவேண்டினார்கள். “மன்னர் பெருமானே! கண்ணைக் கொடுக்காதீர். பொன்னைக் கொடுங்கள். பொருளைக் கொடுங்கள். முத்து, பவழம், மாணிக்கம், மரகதம், வச்சிரம், வைடூரியங்களைத் தானமாக வழங்குங்கள். குதிரைகள் பூட்டிய தேர்களையும், அலங் கரிக்கப்பட்ட யானைகளையும் தானம் கொடுங்கள். நாட்டையும் நகரத்தையும் நிலபுலங்களையும் கொடையாக வழங்குங்கள். வேந்தரே!