உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

111

பெருமான் கொடுத்தால் அவரிடம் ஊழியம் செய்வேன். இல்லையேல் முடியாது.”

“ஏன்?” “தங்கள் அறிந்த வித்தைகளை எல்லாம் நானும் அறிந் திருக்கிறேன் அல்லவா?” “ஆமாம். நான் அறிந்த இசைக் கலை யாவற்றையும் நீ அறிவாய். "அப்படியானால், தங்களுக்குக் கொடுக்கும் ஊதியம்போல சரிபங்கு ஊதியம் தராமல் அரசர் பருமான் ஏன் செம்பாதி ஊதியம் தரவேண்டும்?”

போதிசத்துவர் இதை அரசனுக்குத் தெரிவித்தார். அரசன், “உம்மைப் போல முழுக் கலையையும் உமது மாணவன் அறிந் திருந்தால், முழு ஊதியம் பெறட்டும்” என்று கூறினார். போதி சத்துவர் அரசரின் விருப்பத்தைத் தமது சீடனுக்குத் தெரிவித்தார். சீடனும் ஊழியம் செய்ய உடன்பட்டான். சீடனுடைய உடன்பாட்டை அரசர் அறிந்தபோது அவர் கூறினார். “நன்று, என்றைக்கு நீங்கள் இசையரங்கு நடத்தப் போகிறீர்கள்?"

'பெருமான் அடிகளே! இற்றைக்கு ஏழாம் நாள் இசையரங்கு ஏற்படுத்தலாம்” என்றார் போதிசத்துவர்.

அரசர் பெருமான், மூசிலனை அழைப்பித்து, "உமது ஆசிரிய ருடன் இசைப்போட்டி நடத்த ஆயத்தமாக இருப்பதாக அறிகிறேன். உண்மைதானா?"

66

'ஆமாம், பெருமானே!”

அரசர் பெருமான் அதைத் தடுக்க முயன்றார். “போட்டி இசை யரங்கு வேண்டாம். ஆசிரியருக்கும் மாணவருக்கும் போட்டி நடப்பது கூடாது.

و,

மூசிலன் மறுத்துக் கூறினான்: “பெருமானடிகளே! தடுக்க வேண்டாம். இன்று ஏழாம்நாள் எனக்கும் எனது ஆசிரியருக்கும் இசைப் போட்டியரங்கு நடக்கட்டும். எங்களில் தேர்ந்த கலைஞர் யார் என்பதை உலகம் அறியட்டும்."

அரசர் பெருமான் உடன்பட்டார். முரசு அறைவித்து இசைப் போட்டி அரங்கம் நடக்கப்போவதை நகர மக்களுக்கு அறிவித்தார். “காசி நகரத்தில் வாழும் பெருமக்களே! கேளுங்கள். இன்று ஏழாம்நாள் குட்டிலப் புலவராகிய இசை ஆசிரியருக்கும், அவருடைய மாணவ ராகிய மூசிலருக்கும், இசைப் போட்டி அரங்கு அரசர்பெருமான்