உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் -6 *

-

யான் விலக்கிவிட, அதனை நினைந்தெழும் - ஆற்றாமையாற் பெருகுங், கண்ணின் நுண்துளிகீழ் இதழ் வீழ்ந்து பெரும் துயர் உ உறுத்தியது அன்றே கண்களின் சிறு நீர்த்துளிகள் கீழ் உதட்டின் கண்ணே விழுந்து யான் நின்னை விலக்கிய அந்நாளில் நினக்குப் பெருந் துன்பத்தை யான் விளைத்ததற்கு அறிகுறியாயின வல்லவோ? இன்றே யான் நின்னைத் தலைக்கூடிய இந்நாளிலும், அப்பிரிவினை நினைந்து பெருகும், அது சிறிதே வளைமயிர் இறையில் உற்றதாகலின் அக் கண்ணீர் சிறுதுளிகளாக வளைந்த மயிர்களை

-

விளிம்பிற்

-

யு L ய

றைப்பை பொன்பொடி- பொன்னிறமான பூங்கொடி யனையாய், அதனை - அக் கண்ணீர்த் துளிகளை, அளியேன் பெரும் துயர் நீங்க இரங்கத்தக்க எனது பெருந்துயரம் நீங்கும் படியாக, எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே - மயிலின் சாயலயுடையாய் ஏழையேன் முன்னதாகத் துடைப்பேன் என்றவாறு.

றங்கியிருக்கின்றனவாதலால்,

துளி' என்பது பால்பாக அஃறிணைப் பெயராகலிற் பாட்டில் ஒருமை வினையும், உரையிற் பன்மை வினையும் ஏற்றது. இறையென்பது ஆகுபெயரால் ஈண்டு இறை விளிம்பை யுணர்த்திற்று.

மெய்ப்பித்தல் - உண்மையென நாட்டுதல். கொடியைச் சகுந்தலையாகவும், வேனிற் பருவத்தைத் துஷியந்தன் தானாகவும், மலரைக் கணையாழியாகவும் உட்கொண்டு அவன் கூறுதல் காண்க.

(பக். 145) தக்கன் புதல்வி அதிதி, மரீசியின் புதல்வர் காசியபர்; ஆக, அதிதி காசியபர் இருவரையுஞ் சுட்டுதலின் அவ்விருவர்க்குந் தந்தையரான தக்கனையும் மரீசியையுங் கூறினான். பகலவனாற் பன்னிரு திங்கள் வகுக்கப்படுதலின், அங்ஙனங் காலத்தைக் கூறுபடுக்கும் அவனும் பன்னிரு பகலவர் ஆயினன்; இப்பன்னிருவரும் அதிதிக்குங் காசிய பருக்கும் மக்களாவரென்று புராணங் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/271&oldid=1577754" இலிருந்து மீள்விக்கப்பட்டது