உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இலக்கியநூலைப் போற்றுக

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் முதலிய நூல்களைப் படித்து அவற்றின் இலக்கியச் சுவைகளை அறிந்து இன்புறுதல் வேண்டும். அவற்றில் கூறப்படும் கதையையும், சமயச் சம்பந்தமான செய்திகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்பதில்லை. அவற்றிலுள்ள இலக்கிய அழகை, கலைச்சுவையை யறிந்து மகிழவேண்டும். பகுத்தறி வுடையவர், அந்நூல்களைப் படிப்பதனால் மூடக்கொள்கைகள் நிலைத்துவிடுமோ என்று அஞ்சவேண்டியதில்லை. திரைப்படம், நாடகம் முதலிய காட்சிகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். அவற்றைப் பார்ப்பதனாலே அறிவற்ற மூடர்கள் தீய வழியில் சென்றபோதிலும், பகுத்தறிவும் நல்லறிவுடையவர்கள் அத்தீமைகளைக்கொள்வதில்லை. அதுபோன்று, பழைய இலக்கியங் களில் இக்காலத்துக்கொவ்வாத விஷயங்கள் இருந்தாலும் அவற்றின் பொருட்டு இலக்கியத்தை இழந்துவிடுவது, அல்லது புறக்கணிப்பது அறிவுடைமையாகாது. மனிதன் பகுத்தறிவுடையவன்; அதிலும் காவியக் கலையைப் பயிலும் மனிதன் சிறந்த அறிவுடையவன். அவன் அவைகளைப் படிப்பதனாலே மூடக் கொள்கைகளுக்கு வசமாவான் என்று கூறுவது தவறு, நிற்க.

1

2 3

4 5 6

அடிக்குறிப்புகள்

Adeline Pepper Gibson

A Pillard Hall from a Temple of Madura, India. In the Philadelphia Museum of Art. By Norman Brown. 1940

(Bas Relief)

Madras Museum

Bas relif

(Outline)