உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

/61

கூறுகிறது. பத்துத் திசைகளும் பத்துக் கைகளாகும் என்று காமிகாகமம், அர்ச்சனாவிதிப் படலம் 335 ஆம் சுலோகம், கூறுகிறது. திசைதோள் என்று சேரமான் பெருமாள் நாயனார் தமது பொன்வண்ணத் தந்தாதியில் (19) கூறுகிறார். எண்டிசை எண்டோள் என்று பட்டினத் தடிகள் தமது ஒருபா ஒருபஃதில் கூறுகிறார், திருமாலின் திருவுருவத் தையும் இவ்வாறே மிக அழகாகப் பாடுகிறார், நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார்.

"மாநிலம் சேவடி யாகத், தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாக, விசும்பு மெய்யாகத், திசை கை யாகப், பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே

என்று, உருவமற்ற திருமாலுக்குப் பண்டைக் காலத்துப் பெரியோர் உருவம் கற்பித்ததைச் சொல்லோவியமாகக் காட்டுகிறார். பெருந்தேவனார். இதனால், திருமாலும் சிவபெருமானும் ஆகாயத் தைத் திருமேனியாகவும் திசைகளைக் கைகளாகவும் கொண்டவர் என்பது தெரிகிறது. இவர்களுக்குத் திசைகள் கைகளாக அமைந்தன என்றால், இவர்களின் கைகள் நான்காகத்தானே இருக்கவேண்டும்? திசைகளை எட்டாகவும், பதினாறாகவும் கொள்ளும்போது கைகளும் இவர்களுக்கு எட்டும் பதினாறு மாகத்தானே அமைய வேண்டும்? திசைகளே கைகள் என்று கூறிவிட்டு, உருவம் அமைக்கும்போது ரண்டு கைகளை அமைத்தால் பொருந்தாதல்லவா? திசைகள் இரண்டல்லவே; நான்குதானே. இதனால்தான், சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அமைக்கப்படும் திருவுருவங்களில் கைகள் நான் காகவும், எட்டாகவும் பதினாறாகவும் அமைக்கப்படுகின்றன.

னால், பௌத்த சமண சமயங்களின் தத்துவக்கொள்கை சைவ வைணவ சமயத்தைப் போன்றதல்ல. அருகப்பெருமானும் புத்தர் பெருமானும் மனிதராக இருந்து தமது தவத்தினாலும் ஒழுக்கத் தினாலும் அருகப் பதவியையும் புத்தப் பதவியையும் பெற்றவர்கள். மனிதப் பிறப்பில்தான் அருகநிலையையும் புத்த நிலையையும் அடையலாமே தவிர, மற்றத்தேவர் நரகர் விலங்கு முதலிய