உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப

வடிவம்*

சிவபெருமானுடைய திருவுருவங்களைப் பலவகையாக அமைத்திருக்கிறார்கள். அந்த வடிவங்களில் இருபத்தைந்தை மட்டும் சிறப்புமிக்கவையாகக் கருதுகின்றனர். சிற்பக்கலை நூல்களும் இருபத்தைந்து மூர்த்தங்களையே கூறுகின்றன. தமிழ் மச்சபுராணமும் சிவபெருமானுடைய இருபத்தைந்து மூர்த்தங்களைச் சிறப்பாகப் பேசுகிறது.' மச்சபுராணத்தின் உத்தர காண்டத்தில் இருபத்தைந்து பேரமுரைத்த அதிகாரத் (30)தில், சிவபெருமானுடைய இருபத்தைந்து பேரங்கள் கூறப்படுகின்றன (பேரம் என்பது தெய்வங்களின் உருவம்). அவ்விருபத்தைந்து பேரங்களில் கங்காதர மூர்த்தமும் ஒன்று.

ஐயைந்தாம் பேரப்பேர், நீரலை எறிந்துலட்டுங் கங்கை வையக முதல யாவும் வாய்மடுத் துண்ண வெண்ணி வெய்ய வெங் கோரஞ் செய்ய, மின்னார் செஞ்சடையிற் றாங்கிப் பையரவுடனே சுற்றும் பரன் கங்கா தரனே யாகும். 2

2

வானவெளியிலிருந்து பெருவெள்ளமாக நிலத்தில் பாய்ந்த கங்கையைச் சிவபெருமான், தம்முடைய சடையில் ஒரு சிறு நீர்த்துளியாகத் தாங்கிக் கொண்டதுதான் கங்காதர மூர்த்தம். மகாபாரதத்தில், இந்தக் கதை கூறப்படுகிறது. பகீரதன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து ஆகாய கங்கையைப் பெற்றான். கங்கை வானத்திலிருந்து மிக வேகமாக நிலத்தின்மேல் பாய்ந்து வந்தது. அதன் வேகத்தினாலே நிலவுலகம் அழிந்துவிடும்போலத் தோன்றிற்று. அதனைக் கண்ட தேவர்கள், நிலவுலகம் அழிந்துவிடும் என அஞ்சி, கங்கையைத் தாங்கிக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். சிவபெருமான் அந்தப் பெரிய வெள்ளத்தைத் தம்முடைய சடையின் ஒரு புரியிலே, சிறு துளியாக ஏந்திக்கொண்டார். ஆற்றல்மிக்க அந்தப் பெரிய வெள்ளம் அவருடைய சடையின் ஒரு புரியிலே சிறு துளியாக அடங்கிவிட்டது.

  • Journal of Tamil Studies.5.1974.