உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

69

இந்தப் புராணக் கதையைத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய

தேவாரத்திலே அழகிய சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார்:

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட

ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி

வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கையென்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.3

அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அனேககாலம் வஞ்சமில் தவத்துள் நின்ற மன்னிய பகீரதற்கு

வெஞ்சின முகங்களாகி விசையோடு பாயுங் கங்கை செஞ்சடை ஏற்றார் சேறைச் சென்னெறிச் செல்வனாரே.

4

சிவபெருமான் வான்கங்கையைத் தம்முடைய சடையில் சிறுதுளியாக ஏற்றுக்கொண்டதை. மாணிக்கவாசகர் இரண்டு மகளிர் வாயிலாகக் கூறுகிறார்:

மலைமகளை யொருபாகம் வைத்தலமே மற்றொருத்தி5

புலவர்கள் செய்யுள் வடிவிலே சொல்லோவியமாக அமைத்துக் காட்டிய கங்காதர மூர்த்தத்தைச், சிற்பக் கலைஞர், அழகான சிற்ப வடிவமாகக் கல்லிலே அமைத்துக் காட்டியுள்ளனர். கங்காதர மூர்த்தியின் சிற்ப வடிவம் மாமல்லபுரத்து வராகப்பெருமாள் குகைக் கோயிலிலும் திருச்சிராப்பள்ளி மலைக் கோயிலிலும் எல்லோரா குகைக் கோயில்களில் ஒரு குகையிலும் பாறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் சில கோயில்களிலும் இந்த உருவத்தை நாம் காணலாம்.

னால், இங்கு நான் அறிமுகப்படுத்துவது புதுமையான, வேறெங்கும் காணமுடியாத கங்காதர மூர்த்தியாகும். புதுமையும் கலை நுட்பமும் வாய்ந்த இந்த மூர்த்தத்தை வாசகர் கண்டிருக்க மாட்டாரென நான் கருதுகிறேன். காஞ்சிபுரத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில். அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்ட ஒரு கோயிலில் இந்தச் சிற்ப உருவத்தை நான் கண்டேன்.

இச் சிற்பம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாகும். காலப் பழமையாலே, இது பழுதடைந்து சில இடங் களில் சிதைந்து விட்டது; சிதைந்து போன பகுதிகளை அண்மைக் காலத்தில் பழுது தீர்த்துச் செப்பனிட்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிற்பத்தின்