உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்கோத்பவ மூர்த்தம்*

முழு முதற் கடவுளாகிய இறைவன் அருவமானவன். இறைவனுக்கு உருவம் இல்லை. கண்ணுக்குப் புலனாகாத இறைவனை வணங்குவதற்காக நம் முன்னோர் மூல உருவங்களைக் கற்பித்தார்கள். அந்தத் திருவுருவங்களை நாம் வணங்கி வழிபடுகிறோம். சிவபெருமா னுடைய திருவுருவங்களை எத்தனையோ விதமாக நமது முன்னோர் அமைத்திருக்கிறார்கள். அந்த மூர்த்தங்களில் மூக்கியமானவை இருபத்தைந்து மூர்த்தங்கள். இருபத்தைந்து மூர்த்தங்களில் முதன்மை யானது இலிங்கோத்பவ மூர்த்தம்.

இலிங்கோத்பவ மூர்த்தத்தைச் சிவன் கோவில்களில் காணலாம். கர்ப்பக்கிருகத்தின் (திருவுண்ணாழிகையின்) சுவரில் வெளிப் பக்கத்தில். கர்ப்பக்கிருகத்தின் நேர் பின்புறத்தில் இலிங்கோத்பவ மூர்த்தம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். விதிவிலக்காகச் சில சிவன் கோவில்களில், இலிங்கோத்பவ மூர்த்தம் இருக்க வேண்டிய இடத்தில் திருமால் (விஷ்ணு) திருவுருவம் இருப்பதும் உண்டு. ஆனால், பெரும்பாலும் இலிங்கோத்பவ மூர்த்தந்தான் இருப்பது வழக்கம். சிவன் கோயில் கர்ப்பக்கிருகத்தை வலம் வரும்போது கர்ப்பக்கிருகத்தின் நேர்ப்பின்புறத்தில் இந்த மூர்த்தத்தைக் கண்டு வருகிறோம்.

இலிங்கோத்பவ மூர்த்தத்தின் அமைப்பு: சிவலிங்க உருவமாக அமைத்து அதற்குள் சிவபெருமான் நான்கு திருக்கைகளுடன் காட்சியளிக்கிறார். மேற்புற இரண்டு திருக்கைகளில் மான்மழு ஏந்திக் கீழ் இரண்டு திருக்கைகளை அபயவாத முத்திரைகளாக அமைத்திருக் கிறார். அவருடைய திருமுடியின் உச்சியும் திருவடிகளின் பாதங் களும் காணப்படாமல் மறைந்திருக்கின்றன. திருமுடிப் பக்கத்தில் சிறு அன்னப்பறவை பதிப்பது போலவும் திருவடிப் பக்கத்தில் சிறு காட்டுப் பன்றி தன் கோரைப் பல்லினால் பூமியைக் கிளறிக் கொண்டிருப்பது போலவும் சிற்ப உருவத்தில் அமைக்கப்பட்டிருகின்றன.

  • இராமலிங்க பணிமன்ற முத்திங்களிதழ் 3:12, 1970.