உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

அப்பாடலில், திருமாலுடைய திருமேனியின் திருவுருவத்தை மேற் கூறியவண்ணமே கூறுகிறார்.

"மாநிலம் சேவடி யாகத் தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே’

என்பது அக்கடவுள் வாழ்த்து.

இவ்வாறு கற்பிக்கப்பட்ட உருவந்தான் கடவுளின் உண்மை உருவம் என்பது இதன் கருத்தன்று. இந்த உருவம் கடவுள் -ருவத்தைக் குறிப்பாகச் சுட்டுகிற குறிப்புமட்டுமே.

மேலும், சிவபெருமான், திருமால் திருவுருவங்கள் பல கைகளை யுடைய மனித உருவமாகக் கற்பிக்கப்பட்டாலும், அவ்வுருவங்களில் மனித உடல் வளர்ச்சிப்படி உறுப்புக்களை அமைத்துக் காட்டுவது வழக்கமில்லை. அதாவது, முழு வளர்ச்சியடைந்த மனிதனின் உடம்பு கை கால்கள் முதலான உறுப்புக்கள், தசைக் கட்டுகளுடனும் வலிமையுடனும் காணப்படுவதுபோலக் கடவுள் உருவங்களில் அமைப்பது வழக்கம் இல்லை. அண்டங் களையும் ஆகாயத்தையும் திசைகளையும் கடந்தது கடவுளின் உருவம் என்பதைப்போலவே, மனித உருவத்துக்கும் அப்பாற்பட்டது அவ்வுருவம் என்பதைக் காட்டவே மனித உறுப்புக்களின் தசைக்கட்டுகள் தெய்வ உருவங் களில் காட்டப்படுவதில்லை. வேறு சமயத் தெய்வ உருவங்களுக்கும் நம்முடைய சமயத்தெய்வ உருவங்களுக்கும் உள்ளே வேற்றுமை இதுதான். இதனை விளக்கமாகக் கூறுவோம்.

யவன (கிரேக்க, ரோம) நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் நம்முடைய நாட்டுத் தெய்வச் சிற்ப உருவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளைப் பார்ப்போம். மனித உருவத்தின் அழகையும் வளர்ச்சியையும் சிற்பக் கலையில் நன்றாகப் பொருத்தி, அந்தக் கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகத்திலே பெரும்புகழ் படைத்தவர் கிரேக்கரும் ரோமரும் ஆவர். அவர் தங்கள் நாட்டுக்