உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

அமைக்கப்பட்டிருக்கிறது.

111

சிவபெருமான் சடா முடியுடன் இடதுகையை இடுப்பில் ஊன்றி, வலது கையை அபயம் காட்டி நிற்கிறார். மற்றொரு இடது கையில் மணி மாலை (?) வைத்திருக்கிறார். மற்றொரு வலது கையில் சடைமுடியிலிருந்து ஒரு புரிசடையைப் பிரித்துப் பிடித்திருக்கிறார். அந்தப் புரிசடையில் கங்கை, பெண்மகள் உருவமாக வந்து தங்குகிறாள்.

66

என்றும்,

வையக நெளியப்பாய்வான் வந்திழி கங்கையென்னும் தையலைச் சடையிலேற்றார் சாய்க்காடு மேவினாரே”

“வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயுங் கங்கை செஞ்சடை யேற்றார் சேறைச் சென்னெறிச் செல்வனாரே’

என்றும்,

“கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரமா முகத்தினொடு வானிற்றோன்றும் புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

என்றும் திருநாவுக்கரசர் கூறியதற் கேற்ப, இந்தச் சிற்பம் எழில்பெற அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று இன்னொரு கங்காதர மூர்த்தியின் உருவம், “தர்மராஜரதத்தின்” சுவரில் இருக்கிறது.

14. நான்முகன் : வராகப் பெருமாள் குகைக் கோயிலிலும் நான்முகனாகிய பிரமனுடைய உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், பிரமனுக்கு மூன்று முகங்கள் காட்டப்பட்டுள்ளன மற்றொரு முகம் பின்புறம் இருப்பதாகக் கருதவேண்டும். தருமராஜன் இரதத்திலும் நான்முகனுடைய ஒரு சிற்ப உருவம் இருக்கிறது.

15. திரிவிக்கிரம மூர்த்தி (உலகளந்த பெருமாள்) : வராக மண்டபத்துத் தென்புறச் சுவரில் திரிவிக்கிரமனின் உருவச் சிற்பம் காணப்படுகிறது. திரிவிக்கிரமன் நீண்டு நிமிர்ந்த உருவத்தோடு வலதுகாலைத் தரையில் ஊன்றி நின்று, இடதுகாலைத் தோள் வரையில் உயர்த்தித் தூக்கி நிற்கிறார். தலையில் நீண்டமுடி தரித்திருக்கிறார். பக்கத்துக்கு நான்காக எட்டுக் கைகள் உள்ளன. வலது பக்கத்து நான்கு கைகளில், வாள் குற்றுடைவாள் சக்கரம் ஆகிய ஆயுதங்களை