உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பெருமாள் உருவங்கொண்டு வெளியே எடுத்துத் தொடையின்மேல் வைத்த வண்ணம் நிற்கிறார். அவருடைய காலின்கீழ் நீரும் நீரில் வாழும் நாகனும் காணப்படுகின்றனர். நாரதர் வீணை வாசித்துத் திருமாலைப் புகழ்ந்து பாடுகிறார். தேவர்களும் துதித்துப் போற்றுகிறார்கள்.

66

"சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கற்குன்றம்

திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றியாகி

இலங்குபுவி மடந்தைதனை இடத்துப் புல்கி

எயிற்றினிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்””

என்று திருமங்கை யாழ்வார் பாடியதற்கேற்ப, வராகப் பெருமாள் இச் சிற்பத்தில் காட்சியளிக்கிறார்.

வராகப்பெருமாள் குகைக்கோயிலில் இருக்கிற வராகப் பெருமாள் உருவமும் மேலே கூறப்பட்ட உருவம் போன்றதே. ஆனால், இது கருங்கல் சிற்பம் அன்று; சுதையினால் அமைந்த உருவம். இது இன்றும் வழிபடப்படுகிறது. இந்த வராக மூர்த்தியின் பக்கத்தில் முனிவர் தேவர்கள் முதலியவர்களின் உருவங்கள் காணப்படவில்லை.

12. திருமகள் (கஜலக்ஷ்மி) : வராக மண்டபத்தில் உள்ள இன்னொரு சிற்ப உருவம் திருமகளின் உருவமாகும். இச் சிற்ப ச் உருவத்தில், திருமகள் தாமரைப் பூவின்மேல் அமர்ந்திருக்கிறார். திருமகளுக்குச் சற்றுப் பின்னால் இரண்டு யானைகள் நிற்கின்றன. வலப்புறத்தில் இருக்கிற யானை, தன் தும்பிக்கையினால் பொற் குடத்திலிருந்து திருமஞ்சன நீரைத் திருமகளின் திருமுடிமேல் பொழிகிறது. திருமகளுக்கு முன்புறத்தில், பக்கத்திற்கு இருவராக நான்கு தெய்வ மகளிர் நிற்கின்றனர். இவர்களில் இருவர், தமது தோளின்மேல் நீர்க்குடத்தை ஏந்தி நிற்கின்றனர்.

இதே மாதிரி, திருமகளின் மற்றொரு சிற்ப உருவம் மகாபலி புரத்து வராகப் பெருமாள் குகைக் கோயிலிலும் அமைக்கப் பட்டிருக்கிறது. அந்தச் சிற்பத்திலும் இந்தச் சிற்பம் போன்றே எல்லா அமைப்புக்களும் காணப்படுகின்றன.

13. கங்காதரமூர்த்தி : கங்காதர மூர்த்தியின் உருவம் வராகப் பெருமாள் குகைக் கோயிலின் சுவரில் புடைப்புச் சிற்பமாக