உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

125

41. இடபாரூடர் : இதற்கு வலது பக்கத்தில் கடைசி கோட்டத்தில் உள்ளது இடபாரூடமூர்த்தி என்னும் ஏறு கந்த பெருமான். தலைதாழ்த்தி இயற்கை யழகுடன் நிற்கிற எருதின் பக்கத்தில் சிவபெருமான் சாய்ந்து நிற்கிறார். வலது கையை எருதின் முசுப்பின்மேலும் இடதுகையை அதன் முதுகின்மேலும் வைத்துச் சாய்ந்து நிற்கும் எழில் அழகுடையது. அவருடைய மற்ற இரண்டு வலது இடதுகைகளில் கோடரியையும் மானையும் ஏந்தியிருக்கிறார். அவருடைய புரிசடை, தலைப்பாகை யைப் போலச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. வலது காதில் ஒன்றும் இல்லை. இடது காதில் குழை இருக்கிறது. இது, “அர்ச்சுனன் இரதம் என்னும் கோயிலின் தென்புறச் சுவரில் காணப்படுகிற இடபாரூட மூர்த்தியின் உருவம் போன்றது.

42. பார்வதி பரமசிவன் : மத்திய கோட்டமாகிய கங்காதர மூர்த்திக் கோட்டத்தின் இடது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது சிவன் பார்வதி திருவுருவங்கள்.

43. பார்வதி நடனம் : இதற்கு இடது புறத்துக் கோட்டத்தில் இருப்பது சிவன் பார்வதி திருவுருவங்கள். பார்வதி இடது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். சிவபெருமான், புரிசடையைத் தலைப்பாகை போன்று சுற்றிக் கட்டியிருக்கிறார். நான்கு கைகள். இரண்டு கைகளில் கோடரியையும் திரிசூலத்தையும் ஏந்தி நிற்கிறார்.

44. வீணாதர மூர்த்தி : இதற்கு இடது புறத்தில் கடைசி கோட்டத்தில் வீணாதர மூர்த்தி உருவம் இருக்கிறது. நின்ற வண்ணம் இருக்கிற சிவபெருமான், தண்டு என்னும் வீணையை வலது கையினாலும் இடது கையினாலும் இடது மார்பின் மேல் சாய்த்துப் பிடித்து வீணை வாசிக்கிறார். வீணையின் இசையில் ஈடுபட்டுச் செவிசாய்திதிருக்கிறார். இசையின்பத்தை வியப்பதுபோல, மற்றொரு வலது கையைத் தூக்கி விரல்களை விரித்து வியப்புக் குறியைக் காட்டுகிறார். இன்னொரு இடது கைவிரல்கள் தாளம் அமைப்பது போலக் காணப்படுகின்றன. சிவபெருமான் வீணை வாசித்துக்கொண்டு அந்த வீணை இன்பத்தில் முழுவதும் ஈடுபட்டிருக்கிற காட்சி இது.

னி

45. முனிவர், அடியார் : இனி கிழக்குப்புறச் சுவருக்குச் செல்வோம். கிழக்குச் சுவரின் மத்திய பகுதியில் மூன்றாம் மாடிக்குப் போகப் படிகள் அமைக்கப்பட்டிருப்பதனால் இந்தச் சுவரில் நான்கு சிற்ப உருவங்கள் மட்டும் உள்ளன. படிகளுக்கு வடக்குப் புறத்தில்