உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

போட்டோ படத்தை இந்நூலில் அமைத்து அதன்கீழ் “இரண்டாம் மகேந்திரவர்மனும் அவனுடைய இராணி களும்” என்று எழுதி வைத்துவிட்டார்கள்.

முடிவு என்ன?

காலத்தை

வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஆராய்வது பல தவறுகளுக்கு இடமாகிறது. சாசனத்தில் சிம்மவிஷ்ணு என்றிருப்பதை இவர்கள் தங்கள் விருப்பம் போல நரசிம்மவிஷ்ணு என்று மாற்றுவது ஏன்? பிறகு நரசிம்மவிஷ்ணுவை நரசிம்மவர்மன் என்று மாற்றுவது ஏன்? இவர்களுக்கு முன்பு சிம்மவிஷ்ணு என்னும் அரசன் பல்லவ பரம்பரையில் இருந்ததை இவர்கள் கருதவில்லை?

ஏன்

இந்தக் குகைக்கோயிலில் உள்ள இந்த உருவங்களில் உட்கார்ந்திருப்பது சிம்மவிஷ்ணுவையும் நின்றிருப்பது அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் காட்டுகின்றன என்பதே அறிஞர்கள் கண்ட முடிபு

மேலும், இந்தக் குகைக்கோயிலை அமைத்தவன் முதலாம் பரமேசுவரவர்மன் என்றும், இதற்குச் சான்று பிற்காலத்துச் சோழனாகிய இராஜேந்திரதேவன் காலத்துச் சாசனம் இந்தக் குகைக்கோயிலை பரமேசுவர மகாவராக விஷ்ணுக்கிருகம் என்று கூறுவதையும் காட்டு கிறார்கள். பரமேசுவர மகாவராகம் என்பதற்குப் பரமேசுவரனாகிய மகாவராகம் என்று பொருள் கொள்ள வேண்டும். பரமேசுவரவர்மனால் ஏற்படுத்தப்பட்டதா யிருந்தால் பரமேசுவர வர்ம மகாவராக விஷ்ணு கிருகம் என்று பெயர் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு பெயர் இல்லை. எனவே ஐயத்திற்கும் மறுப்புக்கும் இடமான சிலவற்றை ஆதாரமாகக் கொண்ட இவர்கள் இவ்வாறு எல்லாம் எழுதுவது குழப்பத்துக்குக் காரணமே தவிர தெளிவையும் உண்மையையும் தெரிவிப்பதாக இல்லை.

இந்தக் கோயிலில் இருக்கிற ஏனைய சிற்ப உருவங்களைப் பற்றி (வராகப்பெருமாள், கொற்றவை, கஜலக்ஷ்மி, திருமால், நான்முகன், கங்காதரமூர்த்தி) முன்னமே கூறியுள்ளேன்.