உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மந்திரிகளைக் கொண்டு அந்தத் தெய்வத்திற்குச் சிறப்பு செய்வித்து அனுப்பினார். பிறகு சக்கரவர்த்தி கங்கைக்கரையை யடைந்து, நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப் பெறுவதற்காக மூன்று நாள் கடுநோன்பிருந்தார். நோன்பின் முடிவில் நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அந்த ஒன்பது வகையான நிதிகளாவன :

1. நைசர்ப்பம் 2. பாண்டுகம் 3. பிங்கலம் 4. மகாபத்மம் 5. காலம் 6. மகாகாளம் 7. மானவம் 8. சங்கம் 9. சர்வரத்னம் என்பன.

இந்த நவநிதிகள் ஒவ்வொன்றுக்கும் தலைமையாக ஒவ்வொரு தேவகுமாரனும், காவலாக ஆயிரம் ஆயிரம் பூதங்களும் இருந்தனர். ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும் அந்தந்த நிதியின் பெயரைக் கொண்டவர்கள். நவநிதியோடு தோன்றிய இவர்கள், சகரசக்கரவர்த்தியைப்பார்த்து, “உமது நல்வினையால், நாங்கள் உமது ஊழியர்களானோம். நவ நிதிகளாகிய எங்கள் துணையைக் கொண்டு உமது விருப்பப்படி எல்லா இன்பங்களையும் துய்ப்பீராக. பெரியதாகிய கடல் நீர் வரண்டாலும் வரண்டுவிடும். எங்கள் நிதிச்செல்வம் ஒருபோதும் குறையாது. சக்கரவர்த்தியாகிய தங்களது கட்டளைப்படி ஏவல் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம், என்று பணிந்து கூறின. இவ்வாறு பெறுதற்கரிய நவநிதிகளைச் சகரசக்கரவர்த்தி தமது புண்ணிய வசத்தினால் அடையப்பெற்றார்.

وو

இந்த ஒன்பது வகையான செல்வங்களின் இயல்பாவன: நைசர்ப்பநிதி, வீடுகள் பாசறைகள் கிராமங்கள் அரண்பொருந்திய நகரங்கள் முதலியவற்றை அமைத்துக்கொடுக்கும். பாண்டுகம் என்னும் நிதி நெல், கோதுமை, பருப்புவகைகள் முதலிய தானியங் களையும் உணவுப்பொருள்களையும் வேண்டிய அளவு உண்டாக்கிக் கொடுக்கும். பிங்கலநிதி, ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் யானை குதிரை முதலிய பரிவராங்களுக்கும் உரிய அணிகலன்களை அமைத்துக் கொடுக்கும். மகாபதுமம் என்னும் நிதி, வெண்மை கருமை செம்மை முதலிய பலவித நிறங்களையுடைய பட்டினாலும் பருத்தியினாலும் ஆன உடைகளைப் பலப்பல உருவத்தில் அமைத்துக் கொடுக்க வல்லது. காலம் என்னும் நிதியானது. இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்னும் முக்கால நிகழ்ச்சி களையும் அறிவிப்பதோடு, உழவு கைத்தொழில் முதலியவற்றின் பலாபலன்களையும் முன்னதாகவே தெரிவிக்க வல்லது. மகாகாளம் என்னும் நிதியானது முத்து. பவழம்,