உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

151

பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோகச் செல்வங்களை வேண்டிய அளவு அளிக்க வல்லது. மானவம் என்னும் நிதியானது, போருக்குரிய சேனை களையும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படைகளையும் ஆயுத தளவாடங்களையும் குறைவற அளிக்கவல்லது. சங்கநிதி குழல், யாழ் முதலிய இசைகளையும் நாடகம், பாட்டு, சிற்பம் ஒவியம், காவியம் முதலிய கலையின்பங்களையும் அளிக்கவல்லது. சர்வ ரத்தின நிதியானது ஜீவரத்தினம் ஏழையும், அஜீவ ரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. (ஜீவரத்தினம் ஏழாவன: கிரகபதி, சேனாதிபதி, விஸ்வகர்மன், புரோகிதன், குதிரை, யானை, ஸ்திரீ என்பன. அஜீவரத்தினம் ஏழாவன : - சக்கரம், குடை, வாள், தண்டம், சூடாமணி, தோல், காசிணி என்பன.) நவநிதிகளின் இயல்புகளையும் ஜீவ அஜீவரத்தினங்களின் இயல்பையும் ஜீவசம் போதனை என்னும் ஜைன நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, நவநிதிகளையும் அடைந்து சக்கரவர்த்தியாகச் செங்கோல் நடத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்து வருகிற சகர சக்கரவாத்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளுக்கு சாகரர் என்பது பொதுப்பெயர். அதாவது சகரன் பிள்ளைகள் என்பது கருத்து. இவர்களில் மூத்த மகன் பெயர் ஜானு என்பது.

தக்க வயதடைந்த பிறகு, சாகர குமாரர்கள் அறுபதினாயிரவரும், தேசத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினார்கள். விரும்பியபடியே அவர்கள் சக்கரவர்த்தியிடம் போய் உத்தரவு கேட்டார்கள். அவர்கள் விருப்பத்திற்கு இணங்கிய சக்கரவர்த்தி, ஸ்திரீ ரத்தினம் ஒன்று தவிர ஏனைய ஆறு ஜீவரத்தினங்களையும் ஏழு அஜீவரத்தினங்களையும் அவர்களுக்குத் துணையாகக்கொடுத்து விடை கொடுத்து அனுப்பி னார். பிறகு, சகர குமாரர்கள் புறப்பட்டுச்சென்று பலநாடு நகரங்களைச் சுற்றிப்பார்த்த பிறகு கடைசியாக அஷ்டாபதமலைக்கு வந்து சேர்ந்தார்கள். அஷ்டாபதமலை என்பது கயிலாயமலை. இதற்கு ஹரார்த்திரி என்னும் ஸ்படி காத்திரி என்றும் வேறு பெயர்கள் உண்டு.

(இந்தக் கயிலாய மலையில், சகர குமாரர்களின் முன்னோரான ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்தார். ரிஷப தீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி, ரிஷப தீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடமாகிய இந்தமலையிலே விலைமதிக்க முடியாத செல்வங்களைக்கொண்டு