உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

157

படம 3 காண்க. இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர்நின்று பார்ப்பவருக்கு வலக்கைப்புறத்தின் மேற்புறக் காட்சியாகும். இது ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும் நிதியைக் குறிக்கிறது. இந்நிதியிலிருந்து கிடைக்கிற ஜீவரத்தினங்கள் ஏழு அஜீவரத்தினங்கள் ஏழு ஆக பதினான்கு இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக்காட்டுகிறது. மற்றும் இசைப்பாட்டு முதலியவற்றையும் கின்னர உருவங்கள் முதலிய வற்றால் வெளிப்படுத்துகின்றது. கின்னரர் என்பது அறைக்கு மேல் தெய்வ உருவமும் அறைக்குக் கீழே பறவையின் உருவமும் உள்ளவை. எனவே 2-ஆவது 3-ஆவது படங்கள் சகரசக்கரவர்த்தி நோன்பிருந்து நோற்றதையும் அவர் அடைந்த ஒன்பது வகையான நிதிகளையும் உருவகவாயிலாக இச் சிற்பங்கள் வெளிப்படுத்துகின்றன.

படம் 4 காண்க. இதில் ஒரு கோயிலும் அதன் எதிரில் ஒரு முனிவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பதுபோன்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கயிலாயமலையில் பரதச் சக்கர வர்த்தி அமைத்த ரிஷப தேவர் கோயிலையும், அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவாத்தி தமது உருவத்தை. ரிஷபர் செய்யும் உபதேசத்தைச் செவி சாய்த்துக் கேட்பதுபோல அமைத்திருந்ததையும் (பரதச் சக்கரவர்த்தி யின் உருவத்தையும்) குறிக்கின்றன. (கோயிலுக்கு எதிரில் உள்ள பரதச் சக்கரவர்த்தியின் உருவத்தை யாரோ ரிஷி என்று தவறாகத் தற்காலத்தில் கருதுகிறவர்கள் உண்டு. பண்டைக் காலத்தில் அரசர் களும் சக்கரவர்த்திகளும் தாடி மீசை தலைமயிர் களை நீட்டி வளர்த்திருந்தனர். இதற்கு பௌத்த நூல்களிலும் ஜைன நூல்களிலும் சான்றுகள் உண்டு. சிற்ப உருவங்களின் சான்றுகளும் உள்ளன.) இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஆறு போன்ற காட்சியும் அதில் நாகர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இதைக் கங்கையாறு என்று சிலர் தவறாகக் கருதுகிறார்கள். இது ஆறு அன்று. சகர குமாரர்கள், கோயிலைச் சுற்றிலும் தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இதில் காணப்படுகிறவர்கள், ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனும் அவனுடன் வந்த அவன் அ மனைவி, மந்திரி முதலியவர்களும் ஆவர். பாதாளம் வரையில் அகழிதோண்ட அதனால், நாகர்களுக்குத் துன்பம் உண்டாக, அப்போது சினங்கொண்ட நாகராசன் சாகரிடம் வந்து அவர்களை எச்சரித்த செய்தியை இப்பகுதி குறிக்கிறது.