உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

185

இந்தக் கோயிலின் அமைப்பு எப்படியிருக்கும் என்று இப்போது கண்டறிய முடியவில்லை.

கொகுடிக் கோயில்

கொகுடி என்பது ஒரு மரத்தின் பெயர் என்றும் அம் மரத்தினால் அமைக்கப்பட்ட கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர் உண்டாயிற்றென்றும் சிலர் கூறுவர். இதுவும் தவறு. “கருப்பரியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்” என்று கூறுகிறார் திருநாவுக்கரசர். சுந்தரரும் திருக்கருப்பறியலூர் பதிகத்தில் இக் கொகுடிக் கோயிலைக் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தரும்,

66

"குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயிற்

கற்றென விருப்பது கருப்பறிய லூரே.

என்று கூறுகிறார்.

இந்தக் கோயிலின் விமான (சிகர) அமைப்பு எப்படியிருந்த தென்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டிடங்களில் ஒன்றாகக் கொகுடிக் கோயில் இருக்கக்கூடும் என்று ஊகிக்கலாம். வட்டமான சிகரத்தையுடையது விஜயம் என்று பெயர் பெறும் என்பதை மேலே (கரக் கோயில்) கூறினோம். அந்த வட்டமான சிகரம் கர்ண கூடத்துடன் அமையப்பெற்றால் ஸ்ரீபோகம் எனப் பெயர் பெறும் என்றும் அதுவே நடுவில் பத்ரவரிசையுடன் கூடியதனால் ஸ்ரீவிசாலம் எனப் பெயர் பெறும் என்றும் காமிகாமம்16 கூறுகிறது. கொகுடிக் கோயில் என்பது ஸ்ரீபோகம், அல்லது ஸ்ரீவிலாசமாக இருக்கக்கூடும் என்று கருதலாம்.

மணிக்கோயில்

மணிக்கோயிலின் அமைப்பைப்பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், எட்டுப் பட்டை அல்லது ஆறு பட்டையான சிகரத்தையுடைய கோயிலாக இருக்கக் கூடும் என்று யூகிக்கலாம். சிற்ப நூல்கள் ஸ்கந்த காந்தம் என்று கூறுகிற விமானக் கோயிலே மணிக் கோயில் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.

எட்டுப் பட்டத்தையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உ டையது ஸ்கந்தகாந்தம் என்று காமிகாகமம் கூறுகிறது. ஆறு