உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

"

255

ஒரே பாறைக்கல்லைச் செதுக்கி யமைக்கப்பட்ட அழகிய, சிறிய, கச்சிதமான, காட்சிக்கினியது இக் கோயில் அமைப்பு. 1300 ஆண்டு ஆகியும் இன்னும் புத்தம் புதியதாகக் காணப்படுகிறது. ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த இரண்டு மேடைகளின் மேலே இந்தக் கோயில் எழில்பெற விளங்குகிறது. அடிப்புறத்து மேடையைச் சிங்கங்களும் யானைகளும் தாங்குவது போலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடையிலிருந்து மேல் மேடைக்குப் போக மூன்று படிகள் அமைத்துள்ளன. விசாலமான இரண்டாவது மேடையின்மேல் இக் கோயில் அமைத்திருக்கிறது. இது மேற்குப் பார்த்த கோயில். கோயிலுக்குள் போக மூன்று படிகள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.

இக் கோயிலுக்கு அர்த்த மண்டபமும் முகமண்டபமும் இல்லை; கருவறை மட்டும் அமைந்துள்ளது. கருவறை சதுர அமைப்புள்ளது. கோயிலின் வாயில் 6 அடி 7 அங்குலம் உயரமும் 2 அடி 10 அங்குலம் அகலமும் உள்ளது. வாயிலுக்கு மேலே இரண்டு வளைவுள்ள மகரதோரணம் இருக்கிறது. வாயிலின் இரண்டு பக்கங்களிலும் துவாரபாலிகையர் உருவங்கள் உள்ளன. கோயிலுக்குள் இப்போது கொற்றவையின் உருவம் இல்லை. கருவறைச் சுவரில் கொற்றவையின் உருவம் புடைப்புச் சிற்பமாகப் பாறையில் செதுக்கப்பட்டிருக்கிறது. சுவரின் வெளிப்புறத்தில் மூன்று பக்கங்களிலும் கொற்றவையின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்ப உருவங்களின் விளக்கத்தை இந் நூலின் மற்றொர் இடத்தில் காண்க.

ரென்பதை இரதம் என்னும் இளங்கோயில் தரையமைப்புப் படம்