உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

திருவைகல் மாடக் கோயிலைச் சைவ நாயன்மார்களும், திருமணி மாடக் கோயிலைத் திருமங்கை யாழ்வாரும் தமது பாசுரங்களில் கூறுகிறார்கள். இந்த மாடக் கோயில்கள் பல்லவர் காலத்துக்கு முன்னரே, சோழன் செங்கணான் என்னும் அரசனால் கட்டப்பட்ட செங்கற் கட்டிடங்கள்.

செங்கற் கட்டிடங்களாக இருந்த மாடக்கோயில் அமைப்புகளைப் பின்பற்றி, நரசிம்மவர்மன் மாமல்லபுரத்திலே பாறைகளிலே இம் மாடக்கோயில்களை அமைத்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.

“பீம ரதம்,” “சகாதேவ ரதம்” “கணேச ரதம்” என்னும் மூன்று பாறைக் கோயில்களும் வேசரம் என்னும் பிரிவைச் சேர்ந்த கோயில்கள். மற்றப் பாறைக்கோயில்கள் எல்லாம் திராவிடம் என்னும் பிரிவைச் சேர்ந்தவை.

கோவில் கட்டிடங்களின் மேலேயுள்ள விமான அமைப்பு களைப்பற்றிக் கோயில்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. தமிழிலே வழங்கிவந்த சில பெயர்களைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரத்தில் கூறுகிறார். அப் பெயர்களாவன:- சுரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்பன. இவற்றின் விளக்கத்தை இந் நூலாசிரியர் எழுதிய “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலில் கண்டுகொள்க.

وو

வடமொழி சிற்ப நூல்களும் திராவிட விமானக் கோயில் களுக்குச் சில பெயர்களை வடமொழியில் கூறுகின்றன. அவை: விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம் என்பன.5

66

'திரௌபதை இரதம்

وو

"

இனி மாமல்லனால் மாமல்லபுரத்திலே அமைக்கப்பட்ட இந்தப் பாறைக் கோயில்களின் அமைப்பை விளக்குவோம். முதலில் திரௌபதை “இரதம்” என்னும் கோயிலை எடுத்துக் கொள்வோம். திரௌபதை இரதம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இக் கோயில் உண்மையில் திரௌபதிக்காக ஏற்பட்ட கோவில் அல்ல. துர்க்கை என்னும் கொற்றவைக்காக ஏற்பட்ட கோயில் இது.