உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

263

போன்று, வட்டமாக இருக்கிறது. விமானத்தின் முன்பக்கமாகிய "நெற்றிமுகம்” அரச இலைவடிவமாக அமைந்திருக்கிறது.

நெற்றி முகத்தின்மேலே, மூன்று கொம்புள்ள மனிதன் தலையுருவம் முற்காலத்தில் இருந்தது. இப்போது அந்தத்தலை உடைந்து விழுந்துவிட்டபடியால், மொட்டையாகத் தெரிகிறது. நெற்றி முகத்தில் பௌத்த சைத்தியம் போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சைத்திய உருவங்களும் மூன்று கொம்புள்ள மனிதமும் உருவமும் கணேச இரதம், பீம இரதங்களின் நெற்றிமுகங்களில் உள்ளதுபோல அமைந்துள்ளன.

ம்

இந்த யானைக்கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு யானை நின்று கொண்டிருப்பதுபோன்று ஓர் உருவம் பாறையில் செதுக்கப் பட்டிருக்கிறது. யானையின் உருவம் பக்கத்தில் இருப்பதனால், இக் கோயில் இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயில் என்று லாங்ஹர்ஸ்ட் முதலிய சிலர் கருதுகிறார்கள். ஐராவதம் என்னும் யானையின் உருவத்தை அமைத்து இந்திரனை வழிபடுவது கி. பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த வழக்கம் என்றாலும், அவ் வழக்கம், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே வழக்கொழிந்து விட்டது. ஆகவே, இக் கோயில் இந்திரனுக்காக ஏற்பட்டதல்ல. இந்த யானைக்கோயில், யானையின் உருவம் போன்று அமைக்கப்பட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கு இவ் யானையின் உருவம் அமைக்கப்பட்டது போலும். இக் கட்டிட அமைப்பில் வேறு சிற்ப உருவங்கள் இல்லை.

66

‘கணேச இரதம்”

“கணேச ரதம்" என்று கூறப்படுகிற இஃது உண்மையில் இரதமும் அன்று; கணேசருக்காக ஏற்பட்டதும் அன்று. இங்கு எழுதப்பட்டிருக்கிற சாசனத்தின்படி, அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்பது இதன் பெயர். எனவே, இது சிவபெருமானுக்காக அமைக்கப் பட்ட கோயிலாகும். அத்யந்தகாமன் என்பது முதலாம் பரமேசுவர வர்மனுடைய சிறப்புப் பெயர். இவன், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய பேரன். மாமல்லன் காலத்தில் தொடங்கப் பட்ட இந்தக் கோயில், அவனுடைய பேரன் காலத்தில் முற்றுப் பெற்று, அவன் பெயர் சூட்டப்பட்டது போலும்.