உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

265

இப் பாறைக்கோயிலின் வெளிப்புறச் சுவர், இடையிடையே தூண்களைப் பெற்று அழகாகக் காணப்படுகிறது. சுவருக்கு மேலே மஞ்சமும் (பிரஸதரம்), அதன் மேல் கூட கோஷ்ட பஞ்சரம் கர்ணகூடு முதலான உறுப்புகளும் பல்லவர்கால முறைப்படி அமைந்துள்ளன. மஞ்சத்திற்கு மேல் சற்று உள்ளடங்கி இரண்டாவது பூமி (நிலை) இருக்கிறது. இரண்டாவது நிலையின் சுவருக்குமேல் மஞ்சமும், மஞ்சத்தின் மேல் கூட கோஷ்ட பஞ்சர கர்ண கூடுகளும் உள்ளன. இரண்டாவது நிலைக்குமேல் “கழுத்து” என்னும் உறுப்பும், அதற்கு மேல் படகைக் கவிழ்த்து வைத்தது போன்ற சாலகார விமானமும் இருக்கின்றன. இந்த விமானம் “பீமரதம்” என்னும் கோயிலின் விமானம் போன்றது. நீண்டுகிடக்கும் இந்தச் சாலாகார விமானத்தின் உச்சியில் ஒன்பது கும்பகலசங்கள் உள்ளன. விமானத்தின் இரண்டு கோடியிலும், அஃதாவது வடக்குத் தெற்குப் புறங்களில், முக சாலைகள் (நெற்றிமுகம்) உள்ளன. இம் முக சாலைகளில், "பீமரதத்தின் முகசாலைகளில் காணப்படுவது போன்று, பௌத்தச் சேதிய சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன.

وو

இந்தச் சாலாகார விமானக் கோயில், கோயில் கட்டிடப் பிரிவுகளில் வேசரம் என்னும் பிரிவைச் சேர்ந்தது. பீமரதம் என்னும் கோயிலும் வேசரப் பிரிவைச் சேர்ந்த சாலாகாரக் கோயிலே, பீமரதம், நான்கு பக்கங்களிலும் வாயில்களையும் தாழ்வாரம் போன்ற அர்த்த மண்டபங்களையும் உடையது. கணேச ரதமோ ஒரே அர்த்த மண்டபத்தையும் ஒரே வாயிலையும் உடையது. கணேச ரதமாகிய சாலாகார விமானக் கோயிலைப்போல் பிற்காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்ட கோயில், காஞ்சீபுரத்துக் கயிலாச நாதர்கோயில் முற்றத்தில் உள்ள மகேந்திரவர்மேசுவரக் கிருகம் என்னும் கோயில். அது மூன்றாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது.

கணேசரதம் என்னும் அத்யந்தகாம பல்லவேச்சுரக் கிருகத்தின் அர்த்த மண்டபத்தில், தென்புறச் சுவரில், பல்லவக்கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் சுலோகங்கள் காணப்படு கின்றன. அந்தச் சுலோகங்கள் மாமல்லனுடைய பேரனான பரமேசுவரவர்மன் காலத்தில் எழுதப்பட்டன. அச் சுலோகங்களின் தமிழாக்கம் வருமாறு:

1. ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முச் செயல்களுக்கும் காரணராகவும், ஆதிநாயகராகவும் இருக்கிற காமாந்தக மூர்த்தி