உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

261

எட்டுப்பட்டையுள்ள இந்த விமானத்தின் மேலே கலசம் இல்லை. இங்கு வைப்பதற்காக அமைக்கப்பட்ட கலசம், மேலே வைக்கப்படாமலே இக் கோயிலின் பக்கத்தில் தரையில் இருக்கிறது.

7

இந்தக் கோயிலின் சுவர்களிலே, மூன்று நிலைகளிலும் பல சிற்ப உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. அன்றியும், நரசிம்மவர்மனுடைய சிறப்புப் பெயர்களும் பல்லவக் கிரந்த எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளன. இப் பெயர்களை இந் நூலில் முதல் அத்தியாத்தில் கூறியுள்ளேன். இங்குள்ள சிற்பங்களைப் பற்றி இந்நூலில் சிற்பக்கலை என்னும் பகுதியில் காண்க. இக் கோயிலில் “ஸ்ரீ அத்யந்த காம் பல்லவேசுவரக் கிருகம்” என்னும் பயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று மூன்று நிலையுள்ள மாடக்கோயில், கருங்கல் கட்டிடமாக அமைக்கப்பட்டது வேறு ஒன்று உண்டு. அது காஞ்சீபுரத்து வைகுந்தப்பெருமாள் கோயில் ஆகும். காஞ்சீபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிலுக்கு பரமேச்சுர விண்ணகரம் என்பது பழைய பெயர். அதனைக் கட்டியவன் பிற்காலத்தவனான பல்லவ மல்லன் நந்திவர்மன் என்பவன்.

66

“சகாதேவ இரதம்”

“சகாதேவ இரதம்” என்று பாமரமக்களால் பெயர் கூறப்படுகிற இந்தக்கோயில், உண்மையில் யானைக்கோயில் ஆகும். யானைக் கோயிலை ஆலக்கோயில் என்றும் கூறுவர், வடமொழியில் கஜபிருஷ்ட விமானம் என்பர். இந்தக் கோயிலின் மேற்புறமுள்ள விமானம், யானை முதுகுபோன்று அமைந்திருப்பதனாலே, இதற்கு யானைக்கோவில் என்று பெயர் கூறப்படுகிறது.

8

தெற்குமுகமாக நோக்கியமைந்துள்ள இந்த யானைக்கோயில் மூன்று நிலையுள்ள மாடக்கோயில் ஆகும். மாமல்லன் காலத்திலும் அவன் காலத்துக்கு முன்பும் செங்கல், மரம், சுண்ணம் முதலியவை களினால் அமைக்கப்பட்டிருந்த யானைக் கோயிலின் அமைப்பைக் கருங்கல்லினால் அமைத்துக் காட்டுவது இக்கோயில். மூன்று நிலையுள்ள யானைக் கோயிலின் வெளிப்புறத்தோற்றம், எப்படிப் பண்டைக் காலத்தில் அமைந்திருந்தது என்பதை, இந்தப் பாறைக் கோயிலின் அமைப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தக்