உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கோயிலின் உட்புறமாகவே கருவறைகள் அமைக்கப்படாமல் வெறும் பாறையாகவே இருக்கிறது.

இந்த யானைக்கோயிலின் தரையமைப்பு 18 அடி நீளமும் 11 அடி அகலமும் உள்ளது. அடிமுதல் உச்சிவரையில் பதினாறடி உயரம் உள்ளது. இக் கோயிலின் முன்புறத்தில் சிறிய அர்த்த மண்டபம் அழகுற அமைத்திருக்கிறது. அர்த்தமண்டபத்தை இரண்டு சிங்கத் தூண்கள் தாங்குகின்றன. அர்த்த மண்டபத்துக்குப் பின்னால் கருவறையின் வாயில் அமைந்திருக்கிறது. வாயிலின் இரண்டு பக்கத்திலும், யானையின் முன்புற உருவம் (தலையும் தும்பிக்கையும்) சிற்ப உருவமாக அமைக்கப்பட்டுள்ளன. வாயிலுக்குள் கருவறை அமைக்கப்படவில்லை.

கோயிலின் அமைப்பு, நீண்ட அரைவட்டமாக இருக்கிறது. சுவருக்கு இடையிடையே தூண்கள் அமைந்து கட்டிடத்தை அழகு செய்கின்றன. இவ்வாறமைந்த சுவருக்குமேலே, மஞ்சம் (பிரஸ்தம்) இருக்கிறது. மஞ்சத்தில் கூடு என்னும் உறுப்புகள் அமைந்திருக் கின்றன. மஞ்சத்திற்குமேலே கர்ணகூடு, கூடம், கோஷ்டம், பஞ்சம் என்னும் உறுப்புகளும் பல்லவர்கால முறைப்படி அமைந்துள்ளன.

மஞ்சத்தின்மேல் இரண்டாவது நிலையிருக்கிறது. இரண்டாவது நிலையின் சுவர்கள் சற்று உள்ளடங்கி, முதல் நிலையைப்போலவே நீண்ட அரைவட்டமாக அமைந்திருக்கின்றன. இந்தச் சுவர்களிலும் இடையிடையே தூண்கள் அமைந்துள்ளன. இச் சுவருக்குமேலே கூடுகள் அமைந்த மஞ்சமும், மஞ்சத்துக்குமேலே கூட கோஷ்ட பஞ்சர கர்ணகூடுகளும் உள்ளன.

ச்

இரண்டாவது நிலைக்குமேலே மூன்றாவது நிலை இருக்கிறது. இது. இரண்டாவது நிலையைவிடச் சற்று உள்ளடங்கியிருக்கிறது. மூன்றாவது நிலையும் நீண்ட அரை வட்ட வடிவமாகவும் இடை யிடையே தூண்களையுடையதாகவும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது நிலைக்குமேலே விமானம், யானைமுதுகு போன்ற வடிவமாக அமைந்திருக்கிறது. விமானத்தின் உச்சியில் ஐந்து கும்ப கலசங்கள் முற்காலத்தில் இருந்திருக்க வேண்டும். அவை இப்போது காணப்படவில்லை. ஆனால், அவை இருந்த அடை யாளங்கள் தெரிகின்றன. விமானத்தின் பின்பக்கம், யானையின் பின்பக்கம்