உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

கோடி X கோடி கொண்ட எண்ணுக்குச் சங்கம் என்பது பெயர். அதாவது கோடி, பத்துக்கோடி நூறு கோடி ஆயிரகோடி, இலட்ச கோடி, பத்துலட்சகோடி, சங்கம். இதை எண்ணால் எழுதும் போது ஒன்றுடன் பதினான்கு சுன்னம் எழுத வேண்டும்;

சேர்த்து

100000000000000.

இவ்வளவு

எண்ணிக்கையுள்ள செல்வத்துக்குச் சங்க நிதி என்பது பெயர். இதற்குச் சங்கின் உருவத்தை எழுதிக் காட்டுவார்கள்.

தக்கயாகப் பரணி என்னும் நூலிலே, காளிக்குக் கூளி கூறியது

277

என்னும் பகுதியில் “கொண்டகோடி” என்று தொடங்கும் தாழிசையின் உரையில், உரைகாரர் இதனை நன்றாக விளக்கிக் கூறுகிறார். அவ்வுரைகாரர். எழுதுவது வருமாறு “கொண்டகோடி” என்றது. ஒரு கோடி ஒன்றாகக் கொண்டு எண்ணப்பட்ட ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம் நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி என்றவாறு.

கோடி X கோடி X கோடி X கோடி X கோடி கொண்ட எண்ணுக்குப் பதுமம் என்பது பெயர். இந்த எண் முப்பத்தாறு இடங்களைக் கொண்டது. இதை எண்ணால் எழுதவேண்டு மானால் ஒன்றுடன் முப்பத்தைந்து சேர்த்து

சுன்னம்

100000000000000000000000000000000000.

எழுதவேண்டும் வ்வளவு எண்ணிக்

OÖT OFÁ

கையுள்ள செல்வத்துக்குப் பதுமநிதி என்று பெயர் கூறுவார்கள். இதற்குத் தாமரைப் பூவின் உருவத்தை அமைத்துக் காட்டுவார்கள்.

சங்கநிதி, பதுமநிதிகளைப் பற்றிப் புராணங்களிலும் காவியங் களிலும் காணலாம். சக்கரவர்த்திகள் உலகத்திலே எப்பொழுதோ ஒருமுறை அரிதாகத் தோன்றுகிறார்கள் என்பதும் அவர்கள் சக்கரச் செல்வம் படைத்தவர்கள் என்பதும் அவர்களிடத்திலே சங்கநிதிகள் பதுமநிதிகள் இருந்தன என்பதும் காவியப்புலவர்களின் கற்பனை.

திவிட்டன் என்னும் சக்கரவர்த்தியிடம் சங்கநிதி பதுமநிதிகளும் இருந்தன என்று சூளாமணி காவியம் கூறுகிறது.