உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

287

ஆந்திர நாட்டிலே காடுகளிலும் குன்றுகளிலும் ஆங்காங்கே சிதைந்து அழிந்து கிடக்கிற பௌத்தக் கோயில்களை அரசாங்கத்துப் புதைபொருள் ஆராய்ச்சிக்காரர் (ஆர்க்கியாலஜி இலாகா) கண்டு பிடித்துள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கட்டடங்களுள் நமது ஆராய்ச்சிக்குரிய யானைக்கோயிற் கட்டடங்களும் காணப் படுகின்றன. அவை, மேற் கூரையும் சுவர்களும் இல்லாமல் தரைப் பகுதி மட்டும் காணப்படுகின்றன. இத்தரை யமைப்பைக் கொண்டு அக்கோயில்கள் நீண்ட அரைவட்டமாக இருந்தன் என்பதை அறிகிறோம்.

நாகார்ச்சுனகொண்ட என்னும் மலை முற்காலத்தில் பேர்போன பௌத்தத் திருப்பதியாக இருந்தது. இது ஆந்திர நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே கிருஷ்ணையாற்றக்கரையிலே இருக்கிறது. குண்டூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வண்டியில் மாசெர்வா என்னும் இடத்துக்குப் போய் அங்கிருந்து 16 மைல் சென்றால் இந்த மலையை அடையலாம். இங்கு, அழிந்துபோன சில பௌத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் மூன்று யானைக்கோயில் அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் தரையமைப்பைப் படத்தில் காண்க.

அழிந்துபோய் தரையமைப்பு மட்டும் காணப்படுகிற இந்தப் பௌத்த யானைக்கோயில் கட்டடத்தைக் கட்டியவர் சாந்திஸ்ரீ என்னும் அரசியார். இவர் அக் காலத்தில் இப்பகுதியை யரசாண்ட இக்காகு (இஷ்வாகு) அரச குலத்தைச் சேர்ந்தவர். இச்சயித்தியக் கோவிலை இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கட்டினார். இந்தக் கோவிலின் தரையிலே கல்லில் மேல் எழுதப்பட்ட சாசன எழுத்து இவ்வாறு தொடங்குகிறது.

66

'ஸித்தம் நமோ பகவதோ புத்தஸ சேதிய கரா

இதன் பொருள் : "பகவானுக்கு வணக்கம். புத்தருடைய சேதிய கிருகம்” இதனால், இது பகவன் புத்தருக்கு அமைக்கப்பட்ட சயித்தியக்கோயில் என்பது தெரிகிறது.

இவ்விடத்திலேயே வேறு இரண்டு யானைக்கோயில்களில் தரையமைப்புக்கள் கானப்படுகின்றன. இவற்றைக் கட்டியவர், மேற்படி இக்காகு அரச குலத்தைச் சேர்ந்த போதிஸ்ரீ என்னும் அரசியார். (The Buddhist antiquities of Nagarjuna Konda, Madras Presidency. by, A. H. Loguhurst Members of the Archaeological Survey of India No. 54)