உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநிதி பதுமநிதி*

மனிதரின் நல்வாழ்வுக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவது அறம் பொருள் இன்பம் வீடு என்பவை. இவை நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படுகின்றன. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் இம்மைக்கு – இவ்வுலக வாழ்க்கைக்கு உரியவை. வீடு என்பது மறுமைக்கு உரியது. இம்மை வாழ்க்கைக்கு உரிய அறம் பொருள் இன்பம் என்பவற்றில் முக்கியமானது பொருள். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருட் செல்வம் உள்ளவர் இவ்வுலகத்தில் சிறந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால், பொருள் எல்லோரி டத்திலும் ஒரே அளவாக இருப்பதில்லை. பெரும் செல்வம் உள்ளவர் இலட்சாதிபதிகள் என்று கூறப்படுகின்றனர். பல இலட்சம் பொருளுள் ளவர் கோடீசுவரர் என்று கூறப்படுகின்றனர். நவகோடி நாராயணர் களைப் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறோம். உலகத்திலே உண்மையிலேயே பல கோடீசுவரர்கள் இருக்கிறார்கள். நமது தமிழ்நாட்டிலும் கோடீசுவரர்கள் சிலர் இருக்கிறார்கள்.

பாரதநாட்டுக் காவியப் புலவர்கள் செல்வத்தைப்பற்றிக் கற்பனை செய்திருக்கிறார்கள். கோடி, கோடி, கோடி, கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி

என்று கற்பனை செய்துகொண்டே போகிறார்கள். இப்படிக் கோடி கோடியாகக் கற்பனை செய்து கொண்டே போனால் இதைப் படிப்பவர் விளங்கிக்கொள்வது அருமை, ஆகவே இந்தக் கணக்கு களை விளங்கிக்கொள்வதற்குக் குறியீடுகளையும் பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். இவற்றில் இரண்டு எண்களை மட்டும் இங்கு ஆராய்வோம், அவை சங்கம், பதுமம் என்னும் இரண்டு எண்கள்.

  • சிதம்பரம் ஸ்ரீசிவகாமி அம்மாள் திருக்கோயில் திருக்கம்பாபிஷேக மலர், 1972.