உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

299

யிருக்கும் சேதியத்தில் உருவம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை இது காட்டுகிறது. நெற்றி முகத்தில் காணப்படுகிற இந்தச் சேதிய உருவப் புடைப்புச்சிற்பம், யானைக் கோவில்கள் பௌத்தர் வழிவந்த கட்டிடம் என்பதை நினைவூட்டுகின்றன. இந்தப் பௌத்தச் சேதிய அடையாளங்கள் பல்லவர் காலத்திலும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளது என்பது கருதத்தக்கது.

பௌத்தர் காலயானைக் கோவில் விமானங்களில் காணப்படாத புதிய அமைப்பு இந்த விமானத்தில் காணப்படுகிறது. அது விமானத்தின் மூன்று பக்கங்களிலும் பின்புறத்திலும் நீண்டு குறுகிய மூன்று பஞ்சரங்கள்' அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பஞ்சரங்கள் இரதவிமானத்துக்கு அழகு தருகின்றன.

இந்த யானைக் கோவிலின் கிழக்குப்பக்கத்தில், யானை ஒன்று நிற்பது போலக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது (படம் காண்க) இந்த யானையின் உருவம் இங்கு இருப்பது காரணமாக, இக்கட்டிடம் இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஜராவதம் என்னும் வெள்ளை யானை இந்திரனுடைய ஊர்தி என்பது உன்மைதான். ஆனால் இந்தயானைக் கோவில் இந்திரனுக்காக அமைக்கப்பட்டது அன்று. ஏனென்றால் இது அமைக்கப்பட்ட கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் (இக்கோவில் மாமல்லன் என்னும் நரசிம்மவர்மன் முதலாவன் வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் காலத்தில்) அமைக்கப்பட்டது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே, இந்திரன் வழிபாடு குறைந்து விட்டது. ஆகவே இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோவில் அன்று. இந்த யானையின் உருவம் இக்கட்டிடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறகாரணம் என்னவென்று இது யானையின் முதுகு போன்ற விமானத்தை (உச்சியை) யுடைய கஜ பிருஷ்ட விமானக்கோவில் என்பதைக் காட்டுவதற்க்காகத்தான் என்று தோன்றுகிறது. இந்த யானையின் உருவத்தைப் போலவே இக்கட்டிடத்தின் உருவமும் அமைந்திருக் கிறது என்பதைக் கூறுவதுபோல இக்கட்டிடத்தை யமைத்து சிற்பி இந்த யானையின் உருவத்தையும் அமைத்தார் போலும்.

மாமல்லபுரத்து அழகான கோவிற் சிற்பங்களில் இந்த யானைக்கோவில் சிற்பமும் கண்ணுக்கும் காட்சிக்கும் இனிமை யானது. இதையமைத்த சிற்பியின் பெயரை வாழ்த்துவதற்கு அவன் பெயர் கூடத் தெரியவில்லையே.