உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 23

காவியத்துடன் நாடகம் அடங்கும். அழகுக் கலைகளில் இசைக் கலை காவியக் கலை இரண்டையும் பண்டைத் தமிழர் இயல் இசை நாடகம் என்று மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக் கலையை. செய்யுள் நடையிலும் வசன நடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது செய்யுளை இசையோடு பாடுவது இசைத்தமிழ் எனப்பட்டது. இயலும் இசையும் கலந்து. ஏதேனும் கருத்தையோ கதையையோ தழுவி வருவது நாடகத் தமிழ் எனப்பட்டது. நாடகத் தமிழில் நடனம் நாட்டியம் கூத்து என்பனவும் அடங்கும். எனவே, அழகுக் கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்து கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, கூத்துக் கலை (நடனம் நாட்டியம்), காவியக் கலை, நாடகக் கலை என ஏழாகக் கூறப்படும்.

அழகுக்கலைகளைக் கண்ணினால் கண்டும், காதினால் கேட்டும் உள்ளத்தினால் உணர்ந்தும் மகிழ்கிறோம். இனி இதனை விளக்குவோம்.

கண்ணால் கண்டு இன்புறத்தக்கது கட்டிடக்கலை. பருப் பொருளாக உள்ளபடியால் கட்டிடத்தைத் தூரத்தில் இருந்தும் கண்டு களிக்கலாம்.

இரண்டாவதாகிய சிற்பக்கலை மனிதர் விலங்கு பறவை தாவரம் முதலான உலகத்திலுள்ள பொருள்களின் வடிவத்தையும், கற்பனை யாகக் கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும், அழகுபட அமைப்பது இந்தச் சிற்பக்கலை, கட்டிடக் கலையைவிட நுட்பமானது. இதனையும் கண்ணால் கண்டு மகிழலாம்.

மூன்றாவதாகிய

ஓவியக்கலை சிற்பக்கலையைவி நுட்பமானது. உலகத்தில் காணப்படுகிற எல்லாப் பொருள்களின் உருவத்தையும் உலகில் காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவத்தையும் பலவித நிறங்களினாலே அழகுபட எழுதப்படுகிற படங்களே ஓவியக் கலையாம். இதனையும் அருகில் இருந்து கண்ணால் கண்டு மகிழலாம்.

நான்காவதாகிய இசைக் கலையைக் கண்ணால் காண முடியாது. அது காதினால் கேட்டு இன்புறத் தக்கது.