உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் 31

இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை பேரிசை என்னும் இரண்டு இசைத் தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச் சங்கத்தாரால்) பாடப் பட்டன.... எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத் தொடக்கத்தன என்று வருவது காண்க. இந்த இசைத் தமிழ் நூல்களைப்பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

பஞ்ச பாரதீயம்

இந் நூலை நாரதர் என்பவர் இயற்றினார் என்றும் அந்நூல் மறைந்து போயிற்று என்றும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.5 நாரத முனிவர் வழி வந்தது தமிழ்நாட்டு இசை மரபு என்று கூறப்படுவதும் இங்குக் கருதத்தக்கது. இந்தக் கர்ண பரம்பரை வழக்கு. நாரத முனிவர் தமிழில் பஞ்ச பாரதீயம் என்னும் நூலை இயற்றினார் என்பதனாலும் உறுதிப்படுகிறது. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ வடிகளும், நாரதர் இசையைச் சிறப்பாகக் கூறுகிறார். என்னை?

“நாரத வீணை நயந்தெரி பாடல்” “என்றும், “முது மறைதேர் நாரதனார் முந்தை முறை நரம்புளர்வார்” என்றும், "குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்” என்றும் கூறியது காண்க.'

நாரத முனிவர் வடமொழியிலும் நாரத சிட்சை என்னும் நூல் இயற்றினார் என்றும் அதுவும் அழிந்து போயிற்று என்றும் கூறுவர்.

நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயத்திலிருந்து இசை இலக்கணச் சூத்திரம் ஒன்றை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்.8

அச்சூத்திரம் இது:-

இன்னிசை வழியதன்றி யிசைத்தல்செம் பகையதாகும்

சொன்னமாத் திரையினோங்க விசைத்திடுஞ் சுருதியார்ப்பே

மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகும்

நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டினாரே

என்பதனாற் கொள்க. இது பஞ்ச பாரதீயம்.

இசை நுணுக்கம்

7

இந்நூலை இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடு கிறார்கள். அநாகுலன் என்னும் பாண்டியனுடைய மகன் சயந்த