உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

'இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு: நாற்பெரும் பண்ணும், இருபத்தொரு திறனும் ஆகிய இசை யெல்லாம் செந்துறை. ஒன்பது மேற் புறமும் பதினோராடலும் என்றிவை யெல்லாம் வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்.”14

இந்திர காளியம்

இப் பெயருள்ள இசைத் தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று அவர் எழுதுகிறார். இது அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை எழுதுவதற்கு உதவியாக இருந்தது.

குலோத்துங்கன் இசை நூல்

சோழ அரசர்களில் புகழ் பெற்றவன் குலோத்துங்க சோழன். இவனுக்கு விசயதரன், சயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் களும் உண்டு. கலிங்கப் போரை வென்றவன் இவனே. அதனால், கலிங்கத்துப்பரணி என்னும் நூலைச் சயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்பெற்றவன். இவன் இசைக் கலையில் வல்லவன் என்றும் இசைத் தமிழ் நூல் ஒன்றை இயற்றியவன் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

"வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்

66

மதுர வாரியென லாகுமிசை மாதரிதனால் ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான் யானை மீதுபிரி யாதுட னிருந்துவரவே.

"தாள முஞ்செல வும்பிழை யாவகை

தான்வ குத்தன தன்னெதிர் பாடியே

காள முங்களி றும்பெறும் பாணர் தங்

கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே.

9915

9916

இதனால் இவன் இசைக் கலையை நன்கறிந்தவன் என்பதும், இசைக் கலையில் வல்லவரான பாணர்களின் இசையிலும் இவன் பிழை கண்டவன் என்பதும், இசை நூல் ஒன்றை இவன் இயற்றினான் என்பதும், இவன் அமைத்த இசை முறைப்படி இசை பாடி இவனிடம் பாணர்கள் பரிசு பெற்றனர் என்பதும் அறியப்படுகின்றன.