உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் - 53

2. கொடு கொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்த போது அது எரிமூண்டு எரிவதைக் கண்டு சயானந்தத்தினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மனம் இரங்காமல் கைகொட்டி யாடியபடினினாலே கொடுகொட்டி என்னும் பெயர் பெற்றது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

"பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப

உமையவள் ஒருதிற னாகவோங்கிய

இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடல்.

என்பது சிலப்பதிகாரம்.

9925

வடவை எரியைத்

"தேவர், புரமெரிய வேண்டுதலால் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்டவளவிலே. அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதியரங்கத் திலே, உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்தத், தேவர் யாரினுமுயர்ந்த இறைவன் சாயனத்தத்தால் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி என்னும் ஆடல்." என்பது அடியார்க்கு நல்லார் உரை.

இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புக்கள் உண்டு.

இந்த அ டலில், உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு (விருப்பம்), பொலிவு (அழகு) என்னும் குறிப்புகள் அமைந்திருக்கும் என்று கூறும் செய்யுளை நச்சினார்க்கினியர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்26

கொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி அமையா உட்கும் வியப்பும் விழைவும் பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்

பொலிய ஆடினன் என்ப.'

என்பது அச் செய்யுள்.

99