உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் – அணிகலன்கள்

59

யாப்பருங்கலம் என்னும் நூலின் உரையாசிரியர் கூறுகிறார். அவர் எழுதுவது வருமாறு

37

டு

"வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன: பதினோராடற்கும் ஏற்றபாட்டு, அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக வாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பட்டாய் வருவன......

“இனி இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உறுப்பு 6. கொடுகொட்டி யுறுப்பு 4. குடையுறுப்பு 4. குடத்தினுறுப்பு 5. பாண்டரங்க உறுப்பு 6. பேட்டின் உறுப்பு 4. மரக்காலாடல் உறுப்பு. 4: பாவையுறுப்பு 3. எனவிவை. இவற்றின்றன்மை செயிற்றியமும் சந்தமும்* பொய்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க ஈண்டுரைப்பிற் பெருகும்.”

கூத்து நூல்கள்

இவற்றில் செயிற்றியம் என்பது செயிற்றியனார் என்பவராலும், ச(ய)ந்தம் என்பது சயந்தனார் என்பவராலும் செய்யப்பட்ட நூல்கள்போலும், பொய்கையார் செய்த கூத்த நூல் பெயர் தெரிய வில்லை. இந்தப் பொய்கையாரைப் பொய்கையாழ்வார் என்று கருதி மயங்கக்கூடாது.

விளக்கத்தனார் என்பவர் இயற்றிய விளக்கத்தார் கூத்து என்னும் நூலைப் பேராசிரியர் என்னும் உரையாசிரியரும், யாப்பருங் கல விருத்தியுரைகாரரும் தமது உரைகளில் குறிப்பிடுகிறார்கள். தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியலில், "சேரிமொழியாற் செவ்விதிற்கிளந்து” என்றும் சூத்திரத்தின் உரையில். “அவை விளக் கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன” என்று பேராசிரியர் எழுதுகிறார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் 40-ஆம் சூத்திர உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார்.

மதிவாணனார் என்பவர் இயற்றிய நாடகத் தமிழ் என்னும் நூலிலும் இந்தப் பதினோரு ஆடல்களும் கூறப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. மதிவாணனார் நாடகத்தமிழ் நூலை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டு அந்நூல் சூத்திரம் ஒன்றையும் மேற்கோள் காட்டுகிறார்.39