உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் - 77

விநாயகர்; இரண்டு விநாயகர்களுக்கு இடையிலே கற்பாறையில் குடுமியாமலை இசைக்கலைச் சாசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது 1904 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. 2 கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட இந்தச் சாசனம் 13×14 அடிப் பரப்புள்ள இடத்தைக் கொண்டுள்ளது.

முப்பத்தெட்டு வரிகளையுடைய இந்தச் சாசனம், இராகத்துக்கு ஒரு பிரிவாக ஏழு இராகத்துக்கு ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது, சித்தம் நமசிவாய என்று தொடங்கி இசையைப்பற்றிய செய்திகளைக் கூறியபின்னர் முடிவிலே,

ஸ்ரீருத்ராசார்ய மிஷ்யேண பரம

மாஹேஸ்வரணே ராஜ்ஞா ஹிஷ்ய

ஹிதார்த்த க்வதா: ஸ்வராகமா

என்று முடிகிறது; அஃதாவது, ருத்ராசார்யருடைய சீடரான ஓர் அரசனால் இந்த இசைக்கலைச் சாசனம் இயற்றப் பட்டது என்று கூறுகிறது.

C

[3] 2 Pau

குடுமியாமலை இசைக்கலைச் சாசனத்தின் இறுதி இரு வரிகள் எட்டிற்கும் ஏழிற்கும்

66

இவை உரிய.

என்று பல்லவத் தமிழ் எழுத்தினால் இந்தச் சாசனத்தின் இறுதியில் எழுதப்பட்டிருக்கிறது.

இச் சாசனத்தை எழுதியவன் முதல் மகேந்திரவர்மன் என்று சரித்திர ஆராய்ச்சிவல்லார் முடிவு செய்துள்ளார்கள். பல்லவக் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்டுள்ள இந்தச் சாசனம் நாகரி எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. சங்கீத ரத்நாகரம் என்னும் நூலை இயற்றிய

3