உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

-

ஓவியம் - அணிகலன்கள்

111

இந்தக் கருவிகளை இந்தச் சகோதரர்கள் ஊன்றி ஆராய்ந்து, இவற்றை நம்முடைய இசைப் பாட்டுக்குரிய இசைக் கருவிகளாகக் கொள்ளலாம் என்று கருதினார்கள். ஆகவே அவர்கள் இந்த இசைக் கருவிகளைப் பயின்று, இவற்றை நம்முடைய இசைக் கருவிகளாக மாற்றி விட்டார்கள்.

பிடிலுக்கு வயலின் என்றும் பெயர் உண்டு (Fiddle Violin). வித்துவான் வடிவேலு பிள்ளை பிடிலை இசைத்து வாசித்து அதனை நம்முடை இசைக் கருவியாக்கின போது, அது இசைக் கலையின் ஒரு புதிய வளர்ச்சியைத் தந்தது. இனிமையான பிடில் இசை எல்லோருடைய மனத்தையுங் கவர்ந்து இன்புறுத்தியது. வித்துவான் வடிவேலு பிள்ளையவர்கள் இசைத்த பிடில் இசையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சுவாதித் திருநாள் மகாராசா தந்தத்தினால் பிடில் கருவியைப் புதிதாகச் செய்து அதனை 1834-ஆம் ஆண்டில் வடிவேலு பிள்ளைக்குப் பரிசாகக் கொடுத்தார். திருவாங்கூர் அரசரான சுவாதித் திருநாள் மகாராசா சிறந்த இசைக் கலைஞர். அவர் பல இசைப் பாடல் களை இயற்றிப் பாடியுள்ளார்.

வித்துவான் வடிவேலு பிள்ளையின் சகோதரராகிய வித்துவான் சின்னையா பிள்ளை, ஐரோப்பிய இசைக் கருவியான கிளாரினெட்டை (Clarinet) வாசிக்கப் பயின்று, அதனை நம்முடைய இசைகளை வாசிக்கும் கருவியாக மாற்றினார். கிளாரினெட் என்பது நாதசுரம் போன்ற துளைக்கருவி. இந்தக் கருவியும் இப்போது நம்முடைய இசையுலகில் இடம் பெற்றிருக்கிறது. இசைக் கலையில் புதிய வளர்ச்சியை உண்டாக்கிக் கொடுத்த வித்துவான் வடிவேலு பிள்ளை, வித்துவான் சின்னையா பிள்ளை ஆகிய இருவருக்கும் தமிழுலகம் நன்றி செலுத்துக் கடமைப்பட்டிருக்கிறது.

மத்தளமும் ஆதிகாலம் முதல் இன்றுவரையும் இருந்து வருகிற பழைய இசைக்கருவியாகும்.

இசைக்கலையை மிக உயர்ந்த நிலையில் வளர்த்த தமிழர் வெறும் பாட்டோடுமட்டும் நின்றுவிடவில்லை. பாட்டோடு தொடர்புடைய ஆடற்கலையையும் வளர்த்தார்கள். இக்காலத்தில் தமிழ் நாட்டு இசைக்கலையும் பரத நாட்டியமும் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன என்றால், அதற்குக் காரணம் அக்காலம் முதல் தமிழர் இக்கலைகளை வளர்த்து வந்ததுதான். யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும், நாட்டியம் ஆடுவதிலும் சிறந்தவர்களுக்குப்