உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக வில்யாழ் என்னும் இசைக் கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க்கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறிற்று. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் இசைக்கருவியாக வழங்கிவந்தது. இந்த யாழிலே ஏழு இசைகளையும் அமைத்து வாசிக்கத் தமிழன் கற்றுக்கொண்டான். சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் புகழ் பெற்றிருந்தார்கள்.

காலஞ் செல்லச்செல்ல, யாழிற்குப் பிறகு வீணை என்னும் இசைக்கருவி உண்டாக்கப்பட்டது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்துவிட்டது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கிவந்தது. பிறகு பையப்பைய, கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், யாழ் என்னும் இசைக்கருவி மறைந்து போய் வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது. யாழ் மறைந்து இப்போது ஏறக்குறைய 1000 ஆண்டுகள் சென்று விட்டபடியால், அக்கருவியைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. அதைப்பற்றிப் பதினைந்துஆண்டு ஆராய்ச்சி செய்து, முத்தமிழ்ப் பேராசிரியர் அருட்டிரு விபுலாநந்த அடிகள், 1947- ஆம் அண்டு 'யாழ் நூல்' என்னும் ஓர் அரிய எழுதியிருக்கிறார்கள். இந்நூலில் மறைந்து போன யாழைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

நூலை

யாழ், வீணைகளைக் கூறுகிறபோது, அண்மைக் காலத்தில் புதிதாக இரண்டு இசைக் கருவிகள் கிடைத்திருப்பது பற்றிக் கூறுவது பொருத்தமாகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்திருந்த இரண்டு இசைப் புலவர்கள், ஐரோப்பிய இசைக்கருவிகள் இரண்டினை நம்முடைய இசைக்கருவிகளாக மாற்றி யமைத்தார்கள். அந்தக் கருவிகள் பிடில்., கிளாரினெட் என்பவை. அக்காலத்தில் தஞ்சாவூரையாண்ட மராட்டிய அரசரின் அரண்மனையில் வித்துவான் வடிவேலுபிள்ளை, வித்துவான் சின்னையாபிள்ளை என்னும் சகோதரர்கள் இசைப்புலவர்களாக இருந்தார்கள். அந்தக் காலத்தில் அரண்மனையிலே ஐரோப்பிய பேண்டு (Band) வாத்தியம் வாசிக்கப்பட்டது. அந்த இசைக் கருவிகளிலே பிடில், கிளாரினெட் என்னும் கருவிகளும் வாசிக்கப்பட்டன. இந்த புதுமையான இசைக் கருவிகள் நம்முடைய இசை வாணர்களின் மனத்தைக் கவர்ந்தன.