உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

131

இவ்வாறு சித்திரகாரப்புலி என்னும் பெயரைச் சூடியிருந்த படியினாலே மகேந்திரவர்மன் சித்திரக் கலையை நன்கு பயின்றவன் என்பதை அறியலாம். அது மட்டுமன்று. தஷிண சித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு இந்த அரசன் உரை ஒன்று எழுதினான் என்னும் செய்தியும் அறிகிறோம். மாமண்டூர்க் குகைக்கோயிலிலே இவனைப் பற்றி எழுதியுள்ள சாசனத்திலே, (இப்போது இந்தச் சாசனம் சிதைந்துள்ளது.) 11, 12 ஆவது வரிகளில்

66

.கல்பாத் ப்ரவிபஜ்ய

வ்ருத்திம். ..வ்ருத்திம்.....

தக்ஷிண சித்ராக்யம் (கார) யித்வா யதா விதிஹி.. .ஸ்ச விவிதைஹ் க்ருத்வர வர்ண சதுர்த்த...

என்று எழுதப்பட்டுள்ளது.

1

2

ஒககீராரப்பு3 தேசா42

1. சித்திரகாரப் புலி. 2. சித்ரகார புலி.

இதனால், தக்ஷிண சித்திரத்தைப்பற்றி ஓர் ஓவிய நூலுக்கு இவன் உரை எழுதினான் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தக்ஷிண சித்திரம் என்பது பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கிய ஓவியங்களைக் குறிக்கிறது போலும், ஏனென்றால், தக்கிண இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கைவரையில் ஓரேவிதமான வியக்கலை வளர்ச்சி பெற்றிருத்தாகத் தெரிகிறது. அஃதாவது வடக்கே பாக்குகை, அஜந்தாக் குகைகளில் காணப்படுகிற ஓ வியங்களும் தமிழ்நாட்டிலே காணப்படுகிற ஓவியங்களும் இலங்கையில் சிகிரியா மலைக்கோட்டையில் காணப்படுகிற ஓவியங்களும் ஒரேவிதப் பண்புடையனவாய்க் காணப்படுகின்றன என்று ஓவியநூற் புலவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தக்கிண சித்திரங்கள், அந்தந்த நாட்டிற்கேற்பச் சிறுசிறு மாறுதல்களுடன்