உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-13

காணப்பட்டாலும், பொதுப்படையான அமைப்பில் ஒரேவிதமாக இருக்கின்றன என்று ஓவிய நூல் புலவர்கள் கூறுகிறார்கள்.

மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததும், மகேந்திரவர்மனால் உரை எழுதப்பட்டதுமான தக்ஷிணசித்திரம் எனும் நூல் இப்போது கிடைக்கவில்லை. சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தமது உரையில் ஓவியநூல் என்னும் சித்திரத்தைப் பற்றிய ஒரு நூலைக் குறிப்பிடுகிறார். அந் நூலும் இப்போது கிடைக்க வில்லை.

மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும் பாலும் மறைந்துவிட்டன. நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை, காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலில் காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்ன வாசல் குகைக் கோயிலில், மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில். ஆகும்.' அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு. அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள். இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரிடங்களுடன் காணப்படுகிற இந்த ஓவியத்தை, மேத்தா அவர்கள் “அர்த்தநாரீசுவரர்’ உருவம் என்று கூறுவது தவறு.2

சித்தன்னவாசல் ஓவியம் : மகேந்திரவர்மனும் இராணியும்