உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கட்டடம், சிற்பம்போலவே சித்திரமும் கண்ணால் கண்டு மகிழத்தக்கது என்று அறிவோம். சித்திரம் எழுதும் கோலுக்குத் துகிலிகை என்பது பெயர் (துகிலிகை- Brush). நேர்கோடு, வளைந்த கோடு, கோணக்கோடுகளை வரைந்து சித்திரம் எழுதப்பட்டது. கோட்டினால் வரைந்த சித்திரத்துக்குப் புனையா ஓவியம் என்பது பெயர் (புனையா ஓவியம் Outline Drawing). புனையா ஓவியத்தைப் பலவித வண்ணங்களினால் புனைந்து அமைப்பது சித்திரம் என்று பெயர்பெறும். பழங்காலத்தில் சுவர் ஓவியங்களே சிறப்பாக எழுதப்பட்டன என்று கூறினோம். அரண்மனைகள் மாளிகைகள் கோயில்கள் முதலான கட்டடங்களின் சுவர்களின்மேல் சித்திரங்கள் எழுதப்பட்டன. வெண்மையான சுதை பூசப்பட்ட சுவர்களில் சிவப்பு அல்லது கறுப்பு வண்ணத்தால் புனையா ஓவியம் வரைந்து, அப்புனையா ஓவியத்தைப் பல நிறங்களினால் புனைந்து, சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டன. அரண்மனைகளிலும் கோவில்களிலும் சித்திர மாடங்களும் ஓவிய மண்டபங்களும் இருந்தன.

தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் அரண்மனையில் சித்திர மாடம் இருந்ததை நக்கீரர் கூறுகிறார்.

66

“வெள்ளி யன்ன விளக்குஞ் சுதையுரீஇ மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச் செம்பியன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ வொருகொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’

என்பது நெடுநல்வாடை.

திருப்பரங்குன்றின்

மேலே

மதுரைக்கு அடுத்துள்ள அக்காலத்தில் முருகப்பெருமானுக்குக் கோயில் இருந்தது. அந்தக் கோயிலைச் சார்ந்த மண்டபத்தில் ஓவியங்கள் எழுதப்பட்ட மண்டபம் இருந்தது. அது 'எழு தெழில் அம்பலம்' என்று பெயர் பெற்றிருந்தது. அந்த ஓவியச்சாலை காமவேளின் ஆயுதப் பயிற்சி சாலை போல இருந்ததாம்.

66

'நின் குன்றத்து

எழுதெழில் அம்பலம் காம வேள்அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்”