உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

141

என்று பரிபாடல் ( 18-ஆம் செய்யுள்) கூறுகிறது. அந்தச் சித்திர மண்டபத்திலே இரதி, காமன், இந்திரன், பூனை, அகலிகை, கவுதமன் முதலான பலருடைய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தனவாம். இதனைப் பரிபாடல் ( 19-ஆம் செய்யுள்) கூறுகிறது.

66

“இரதி காமன் இவள் இவன் எனாஅ

விரகியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுறு ஒன்றிய படியிதன் றுரைசெய் வோரும் இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்”.

இந்தச் சித்திரங்கள், இராமாயணத்தில் கூறப்படுகிற கவுதமன் அகலிகை கதையைச் சுட்டுகின்றன. அந்த எழுதெழில் அம்பலம் பிற்காலத்தில் அழிந்துபோயிற்று.

மகதநாட்டரசனான உதயணன் தன்னுடைய பள்ளியறைச் சுவர்களில் கைதேர்ந்த ஓவியக் கலைஞர் எழுதியிருந்த பூங்கொடிகள், மான்கள், மறிகள் முதலான இயற்கைக் காட்சி ஓவியங்களைக் கண்டு வியந்தான் என்று பெருங்கதை நூலாசிரியர் கொங்குவேள் கூறுகிறார்.

66

'வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின்

மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக் கொடியின் வகையும் கொடுதாள் மறியும் வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்

திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின் மெய்பெறு விசேடம் வியந்தனன் இருப்ப”.

(மகத காண்டம், நலனாராய்ச்சி, 97- 102)

கிரேக்க நாட்டில் வெசூவியஸ் எரிமலையின் அடிவாரத்தில் கடற்கரைக்கு அருகில் பாம்ப்பி என்னும் நகரம் இருந்தது. அந்த நகரத்திலே மாளிகைகளும் மாளிகைச் சுவர்களில் சுவரோவியங் களும் இருந்தன. கி. பி. 17-இல் வெசூவியஸ் மலை திடீரென்று நெருப் பையும் அனற்பிழம்பையும் கனற்சாம்பலையும் வெளியே கக்கிற்று. அதனால் நகரத்திலிருந்த மனிதர்முதலான உயிர்கள் எல்லாம் மாண்டு மடிந்துபோயின. அல்லாமலும் பாம்ப்பி நகரம் நெருப்பும் சாம்பலும் மூடி அழிந்து மறைந்து போயிற்று. பல நூற்றாண்டுகளாக மறைந்து