உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக முத்துக்கள்*

சிப்பி என்பது கடலில் வாழும் பிராணி. சிப்பிகளிலே முத்துக்கள் உண்டாயின. முத்து அதிக விலை மதிப்புள்ளது. அது நவரத்தினங் களிலே ஒன்றாகும். ஆறுகள் கடலிலே கலக்கிற புகர் முகத்திலே பெரும்பாலும் முத்துச் சிப்பிகள் உண்டாயின. சிப்பிகளைப் போலவே சங்குகளும் கடலில் உண்டாயின. வலம்புரிச் சங்குகள் அருமையாகக் கிடைத்தன. ஆகையினாலே இடம்புரிச் சங்கைவிட வலம்புரிச் சங்கு அதிக விலை பெற்றது. நீரினுள் மூழ்கிப் பயின்றவர்கள் நீருள் மூழ்கி முத்துச் சிப்பிகளையும் சங்குகளையும் கரைக்கு மேல் கொண்டு வந்தார்கள். கொண்டுவரப்பட்ட சிப்பிகளில் முத்துக்கள் கிடைத்தன. சங்குகளை வளைகளாக அறுத்து விற்றார்கள். சங்கு வளைகளை அக்காலத்து மகளிர் கைகளில் அணிந்தனர். வலம்புரி வளைகளைச் செல்வச் சீமாட்டி களும் அரசிகளும் அணிந்தார்கள். செல்வரும் அரசரும் முத்துக்களை அணிந்தார்கள்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை யரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டிய அரசனுடைய மகளை மணஞ்செய்து முடிசூடி அரசாண்டான். அவன் பாண்டிய அரசனுக்கு ஆ ண்டு தோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு லட்சம்) பொன் மதிப்புள்ள முத்துக்களைச் செலுத்திக்கொண்டிருந்தான் என்று இலங்கையின் பழைய வரலாற்றைக் கூறுகிற மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. (மகாவம்சம் 7-ஆம் அதிகாரம் 72-73.)

பழங்காலத்திலே பல இடங்களில் முத்துக்கள் கிடைத்தன. ஆனால், அவை எல்லாவற்றையும்விடப் பாண்டிநாட்டு முத்துக்கள் உலகப் புகழ் பெற்றிருந்தன.

பாண்டி நாட்டின் கிழக்குக் கரையில் இருந்தது கொற்கைக் கடல். டி கீழ்க்கடல் (வங்காளக்குடாக் கடல்) கொற்கைப் பட்டினத்தின் அருகில் உள்ளே குடைந்து புகுந்து உள் கடலாகக்-குடாக்கடலாக-அமைந்தி *நுண்கலைகள் (1967). நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.