உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

195

சொல் தோன்றியிருக்க வேண்டும் என்று தவறாகக் கருதினார்கள். ஆனால் வரலாற்று முறைப்படி ஆராய்ந்து பார்த்தால், எழினி என்னும் தமிழ்ச் சொல்லை வடமொழியாளர் கடனாகப் பெற்றுக்கொண்டு, அந்த எழினியைச் சரியாக உச்சரிக்க முடியாமல் சமஸ்கிருத மொழியின் இயல்புப்படி, அதை யவனிகா என்று திரித்துக்கொண்டனர் என்பது தெரிகிறது. எழினி என்னும் சொல்லை மட்டுமல்ல, அரங்க மேடையில் உபயோகிக்கும் எழினியையும் அவர்கள் தமிழரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்பதும் தெளிவாகிறது. நாடக மேடையில் அவர்கள் சொந்த மாகவே ஆதியிலிருந்து திரைச்சீலையைப் பயன்படுத்தியிருந்தால் அவர்கள் எழினி என்னும் சொல்லைக் கடன் வாங்க வேண்டிய தில்லையல்லவா? பொருளையும், அதன் பெயரையும் ஆகிய இரண்டையுமே அவர்கள் கடனாகப் பெற்றனர் என்பது நன்கு விளங்குகிறது.