உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியக் கலை*

கவிஞர்களும் காவியப் புலவரும் கவிதைகளையும் காவியங் களையும் இயற்றுகிறார்கள். சிறந்த கவிதைகள் படிப்பவருக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கின்றன. சிற்பக் கலைஞர், ஓவியக் கலைஞர்களின் சிற்ப ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்து மனத்துக்கு மகிழ்ச்சியைத் தருவது போலவே, கவிஞர்களும் காவியப் புலவரும் பாடித்தருகிற எழுத்தோவியங்கள் படிப்பவர் மனத்தைக் கவர்ந்து மகிழ்ச்சியூட்டு கின்றன. சில சமயங்களில், சிற்ப ஓவியங்கள் தருகிற இன்பத்துக்கு மேலாகக் கவிஞர்களின் சொல்லோவியங்கள் அளவற்ற இன்பத்தை யளிக்கின்றன. தமிழ்மொழியிலே பேரின்பந் தருகிற தீஞ்சுவைக் கவிகளைக் காணலாம். அக்கவிதைகளைப் படிக்குந்தோறும் மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் முழுகிவிடுகிறது. அத்தகைய சுவை மிக்க இனிய கவிதைகளில் சிலவற்றைப் பரு கிச்

சுவைக்கலாமே!

சிறு வெள்ளாம்பல் சிரித்தது!

சூளாமணிக் காவியத்தை இயற்றிய தோலாமொழித்தேவர் செஞ்சொற் புலவர். அவர் இயற்றிய ஒரு செய்யுளைப் பார்ப்போம்.

குளிர்ந்த நீருள்ள பொய்கையிலே தாமரைக் கொடிகளும் ஆம்பற் கொடிகளும் படர்ந்து தாமரைப் பூக்களையும், ஆம்பற் பூக்க ளையும் ஏந்தி நிற்கின்றன. ஆனால் தாமரைப் பூக்கள் பகலில் மலர்ந்து மாலை நேரத்தில் இதழ் மூடிக் குவிகின்றன. ஆம்பற் பூக்கள் மாலை நேரத்தில் மலர்ந்து சிரிக்கின்றன. காதலனுடன் மகிழ்ந் திருக்கும் காதலி, காதலனைப் பிரிந்துபோது முகம் வாடுகிறாள். அவளுடைய முகவாட் டத்தைக் கண்டு சிறு மனம் படைத்தோர் சிரிப்பதுபோல, சூரியன் மறைந்தபோது இதழ் குவிந்த தாமரைப் பூக்களைப் பார்த்துச் சிரிப்பதுபோல வெள்ளாம்பல் மலர்கள் பூத்தன என்று சொல்லோவியம் தீட்டுகிறார் தோலாமொழிப் புலவர். இவர் தீட்டிய சொல்லோவியத் தைப் படியுங்கள்.

  • தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (1956) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.