உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள்

263

செய்யுளில் படிக்கும் போது எவ்வளவு உவகை பொங்குகிறது படிப்பவர் மனத்தில்!

வெயிலெரிக்கும் வெஞ்சுரம்:

பாலை பாடிய பெருங்கடுங்கோ சேர அரசர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் பாலைத்திணைச் செய்யுட்களையே பாடியுள்ளார். அவர் பாடிய செய்யுள் ஒன்றில் பாலை நிலத்தையும் அங்குள்ள பட்டுப்போன மரத்தையுங் கூறுகிறார். கூறுகிறவர்தாம் கண்ட உலகியல் உண்மைகளைப் பட்டுப்போன மரத்துடன் பொருத்திக் கூறுகிறார்.

நீர் அற்ற பாலைவனத்தில் சூரியவனின் வெம்மை தவிர அங்கு வேறொன்றுங் கிடையாது. தப்பித் தவறி அங்கிருக்கிற மரங்கள் கருகிச் சாய்ந்து கிடக்கின்றன. உலர்ந்து பட்டுப் போன சில மரங்கள் அந்தப் பாலை நிலத்தின் வெம்மைக்குச் சான்று பகர்கின்றன. வேர் முதல் நுனி வரையில் உலர்ந்து போன மரத்தில் இலைகளை எதிர்பார்க்க முடியுமா? இலைகள் இல்லாத காய்ந்து போன மரத்தின் கீழே தங்குவதற்கு நிழல் இல்லை. கிளைகள் எல்லாம் வற்றிக் காய்ந்து கிடக்கின்றன. பட்டுப்போன மரத்தின் காட்சியைக் கண்ட பெருங்கடுங் கோவின் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகின்றன. கடைசியில் அவருடைய கருத்துக்கள் அழகான செய்யுள் வடிவமாக வெளிப்படுகின்றன. இச் செய்யுளைப் படியுங்கள். ச்

66

'வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி

யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக் கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி அவன்கிழல்

உலகுபோல் உலரிய உயர்மர வெஞ்சுரம்.” (பாலைக்கலி- 10)

(சினைய-கிளைகளையுடைய. இகந்து செய்து-செய்யத் தகாதவற்றைச் செய்து. இசை-புகழ். ஆறின்றி - (நீதி.) முறையில்லாமல். வெஃகி - விரும்பி. வினைவர்-அரச ஊழியர். உலகுபோல்-குடிமக்கள் போல.)

வறுமையுள்ள இளையவன் பொருளில்லாமையால் இன்பம் துய்ப்பதற்கு முடியாமல் வருந்துவதுபோல அந்த மரக் கிளைகள்