உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

பொன் பரப்பினானான மகதைப் பெருமாள் கவி.

தாரு முடியு முரசுந் தமக்குரிய

பாரு முடன்பெறுவர் பார்வேந்தர் - வீரப்

பெருமாள் மகதேசன் பேரெழுதித் தத்தம்

திருமார்பி லாளோலை செய்து.

வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி

தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய் மல்லார்தோள் மாகதர்கோமான் முனிந்தால் மன்னவருக் கெல்லாங் கடலோ விடம்.

ஆழந் தருகடல் வையத் தரசு

செலுத்திய செங்கோ லரசெல்லாம்

வேழந் தருகொடை வாண திவாகரன் விதிமுறை செய்வது மெய்கண்டீ

ரீழந் திரையிடு மாணிக் கப்படி

யடுமின் தென்னரீ ரிடீராகிற்

சோழன் திரையிடும் யானைக் குங்களை யிடுமென் றிருமிது சொன்னோமே.

1

2

3

பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித்

தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை

குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்ப

ரின்றெடா னின்றெடா னென்று.

4

தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு

முருவத் திகிரி யுயர்நெடுந்தோர் வாணன் புருவக் கடைவளையப் போம்.

5

தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா

தூந்து மணிநீர்த் துறையாகா - வேந்துமுலைப் பூணாகா மாறி விழவாகா பொன்னெடுந்தேர் வாணாகா வென்னாதார் மண்.

6