உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

'ஸ்வஸ்திஸ்ரீ. திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வெங்கை நாடுங் கங்காபாடியு நுளம்பபாடியுந் தடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர வீழமண்டலமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவிராஜ இராஜசேகரி பன்மரான இராஜராஜ தேவர்க்கு யாண்டு 21 - ஆவது.

சாசனச் செய்யுள்

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன் அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவ தென்றுங் கலைபுரியு மதிநிபுணன் வெண்கிழான் கணிச் செக் கர மருபொற் சூரியன்றன் நாமத்தால் வாம நிலைநிற்குங் கலிஞ்சிட்டு நிமிர்வைகை மலைக்கு நீடூழி இருமங்கும் நெல்விளையக் கண்டோன் கொலைபுரியும் படைஅரைசர் கொண்டாடும் பாதன்

குணவீர மாமுனிவன் குளிர்வைக்கக் கோவேய்.

சு

குறிப்பு :- பொன்னி ஆறு -காவேரி ஆறு. கலிஞ்சு - கலிங்கு.

கோப்பெருஞ் சிங்கன்

இடம் : வடஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வாயலூர். இவ்வூர் ஏரி கரைமேல் உள்ள கல்லில் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள். இந்த வாயலூர், செங்கற்பட்டிலுள்ள வாயலூர் அன்று. இது தெள்ளாற்றிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது.

பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி இருபத்து மூன்று பக்கம்

174 -182. (Epigraphia Indica Vol. XXIII. page 174 - 182.)

விளக்கம் : கோப்பெருஞ் சிங்கன் என்னும் பல்லவ அரசன். தெள்ளாறு என்னும் ஊரில் சோழ அரசனுடன் போர் செய்து அவனை வென்றுச் சிறைபிடித்து வைத்ததையும், அவனுடைய வீரத்தையும் புகழ்ந்து பேசுகின்றன இந்தச் செய்யுட்கள். இந்தத் தெள்ளாற்றுப் போர், மூன்றாம் நந்தி வர்மன் என்னும் பல்லவ அரசன் பாண்டியனுடன் செய்த தெள்ளாற்றுப் போர் அன்று. இது பிற்காலத்தில் நடந்த போர்.