உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

தில்லை மூவாயிரவர் தங்கள் திருவளர

எல்லையில் பேரேரிக் கெழில்மதகு - கல்லினால் தானமைத்தான் தெவ்வேந்தர்க் கெல்லாங் கலந்தவீர வானமைத்தான் தொண்டையார் மன்.

63

38

ஹர உ இது வெட்டுவித்தான் காலிங்கராயர் ஆண்ட அரசு. அற மறவற்க அறமல்லது துணையில்லை. திருச்சிற்றம்பலம்.

குறிப்பு : சாசனத்தைப் பொறித்த சிற்பியின் தவறுதலினால், சில செய்யுட்களில் பொருள் விளங்காதபடி எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவை சாசனத்தில் உள்ளபடியே அச்சிடப்பட்டுள்ளன. 24-ஆம் செய்யுளில் மூன்றாம் அடியில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. 1, 2, 4- ஆம் செய்யுட்களில் “மேந்தான்” என்றிருப்பது வேய்ந்தான் என்றிருத்தல் வேண்டும்.

இச்செய்யுட்களில் கூறப்படுகிற நரலோக வீரன், தொண்டை யர்மன், காலிங்கன், கூத்தன் என்னும் பெயர்களை உடையவன்.

செய்யுள் 15. நரலோக வீரன் தில்லைச் சிற்றம்பலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தை அமைத்ததை இச்செய்யுள் கூறுகிறது. இந்த மண்டபத்திற்கு ஸ்ரீ விக்கிரமசோழன் திருமண்டபம் என்று பெயர் சூட்டினான். ந்த மண்டபத்துத் தூண்கள் சிலவற்றில் இன்றும், “ஸ்ரீ விக்கிரம சோழன் திருமண்டபம்" என்று எழுதப் பட்டிருப்பதைக்

காணலாம்.

செய்யுள் 22. இதில், அபயன் என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனை.

விக்கிரம பாண்டியன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்து வடக்குப் பக்கச் சுவரில் எழுதப்பட்டுள்ளவை.

பதிப்பு : ‘செந்தமிழ்' நான்காந் தொகுதி : பக்கம் 493, 494.

விளக்கம் : விக்கிரம பாண்டியன் வெற்றிச் சிறப்பைக்

கூறுகின்றன.