உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

விக்கிரம பாண்டியன்

65

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம்

. நடராசர் கோவில் இரண்டாம் பிராகார வாயிலின் மேற்குப் பக்கச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 228. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.228. S.I.I. Vol. IV.)

விளக்கம் : புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயருடைய விக்கிரம பாண்டியன். வெள்ளாறு என்னும் இடத்தில் போர் வென்றதையும், பகை மன்னரைச் சிறைப்பிடித்ததையும்

இச்செய்யுட்கள் கூறுகின்றன.

சாசனச் செய்யுள்

சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கிற் செவ்வாறு பட்டோட வவ்வாறு சென்றப் போர்வென்று வனப்பேய் நடங்கண் டதற்பின் புலியூர் நடங்கண்ட புவனேக வீரா பார்பண் டளந்துண்டோ ராலிற் கிடக்கும் பச்சைப் பசுங்கொண்ட லேபத்ப நாபா

கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றுங்

கடலல்ல வென்பேதை கண்டந்த கடலே.

1

மாறுபடு மன்னவர்தங் கைபூண்ட வாளிரும்பு வேறுமவர் கால்பூண்டு விட்டதே - சீறிமிக வேட்டந் திரிகிளிற்று விக்கிரம பாண்டியன்த

னாட்டங் கடைசிவந்த நாள்.

2

குறிப்பு :- செய்யுள் 1. புவனேக வீரன் - இது மாரவர்மன் விக்கிரம பாண்டியனின் சிறப்புப் பெயர்.

செய்யுள் 2. விக்கிரம பாண்டியன். இவன் கி.பி. 1269 முதல் 1296 வரையில் அரசாண்டான். மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்தவன். இந்தச் சோழன் உதவியினால் பாண்டிய அரசைப் பெற்றவன்.