உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

140 திருமடைப் பள்ளிப் பெருமடைக் குறவு மிந்தன வொருவற்குத் தந்த முன்னாழியும் ஆகநெற் கலமு மேகநற் றிவசம்

அப்பரி சியற்றிலி லறுவகை யிருதுவு மிப்பரி சியற்றி யெழுந்துநே ரானபின் 145 புதுமலர் விரிந்து மதுமலர் சோலைப் புள்ளூர் கோவ லுள்ளூர்ப் பழநிலம் இரட்டு முக்காலிற் றந்த பதினைஞ்சு மொட்டுக் கல்லைக் கவர்மூன்று மாவும் ஆலஞ் செறுவி லஞ்சு மாவும்

150 திரண்டு பாய்புனற் றெங்காச் செறுவி லிரண்டு மாவும் இலுப்பைக் காலிரண்டும் நெல்லா லித்தெழும் புல்லா லிப்புற மஞ்சொடுங் கூட்டி ஆகிய நிலத்தொகை அப்புத்திரண் டியல்மா முப்பத் திரண்டு

155 மேலா றுணந்த நாலா றெண்பயி லந்தண ரனைவர்க்கு மரிச்சனா போகந் தந்தப் பின்னைத் தடமலர்ப் பொய்கைப் போதகர் பழனப் புதுமலர்ச் சோலைச் சிதாரி பலமஞ்சு மஞ்சமாற் கெட்ட

160 திருவையன் கோட்டமில் குணத்தாற் செம்பொற் புரிசைச் சிவபுரத் தாற்குக் கோவ

லந்தணர் பாற்கொண்டு கொடுத்தன

பண்டைக் கோலாற் பண்டைக் குழித்தொகை மணங்கொண் டீண்டு முணங்கல் பூண்டி

165 யொப்புத் தொறுமா முப்பத்தறு மாவு மிகவந் துயர்புனற் பகவந்தக் கழனி யெட்டுமுத லிருபது மாவு மட்டவிழ் பூத்துழா வியபுனல் மாத்துழான் வேலி ஏவிய வெட்டு மாவும் வாவியற்

170 கோடாறு பழனக் காடேறு மாநில மஞ்சுங் களர்நிலம் பத்துந் நெஞ்சகத் துள்ளத் தகும்புன லுரவுக் கடலுகா

73