உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

விளக்கம் : இந்தக் கோவிலில், அழகியபெருமாள் இளை யாழ்வார், மலர்மகள், அனுமார் இவர்களின் உருவங்களைக் குருகூர்நம்பி என்பவர் அமைத்ததைக் கூறுகிறது இச் செய்யுள். சாசனச் செய்யுள்

அன்னவயல் சூழ்அன்பி லவர்கள்நீடி

அழகெய்தி முப்பொழுதுங் கண்டுபோற்ற மன்னும் அழகிய பெருமாள் இளையகோவை மலர்மகளை மாருதியை எழுந்தருளு வித்தோன் கன்னநய குடைத்தடகைப் பாருண்நிதி

காண்டகுசீர்க் கிளைதாங்கி கலைகள் ஓதி செந்நெல்வயல் சூழ்வீரை சிங்கம்எங்கள்

சீகுருகூர் நம்பிஎனுஞ் செழுமறையோன் தானே.

குறிப்பு :- சுந்தரராசப் பெருமாள் என்று இப்போது வழங்குகிற பெயர் பண்டைக்காலத்தில் அழகியபெருமாள் என்று வழங்கியது.

சிராமலையந்தாதி

இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம்,

திருச்சிராப்பள்ளி

மலையின்மேல் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவில் சுவர்களில் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 167. (No. 167. S. I. I. Vol. IV.)

விளக்கம் : இந்தச் செய்யுட்கள், சிராமலைச் சிவபெருமான் மீது பாடப்பட்ட அந்தாதிச் செய்யுட்கள். கலித்துறைப் பாவினால் இயற்றப்பட்டவை. இதனைப் பாடிய புலவர் பெயர் நாராயணன் என்பது. இவர் கி.பி. 9 அல்லது 10- ஆம் நூற்றாண்டில் இருந்தவராவர். சில செய்யுட்களில் இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்து விட்டன.

சாசனச் செய்யுள்

உலக மடந்தை நுதலுறந்தைப் பதி யந்நுதற்குத் திலதம் பரம னமருஞ் சிராமலை யம்மலைவா

யலகின் னிறைந்த கதிர்மணி பாய . . மேல் வந்ததந்தாதி ·ப் பொன்னி பரன் கழுத்திற் கொண்ட வெள்வடமே.

1